32 ஆம் ஆண்டு அல்வாய் முத்துமாரியம்மன் ஆலய படுகொலையின் நினைவேந்தல்!!📷

யாழ். வடமராட்சி பகுதியில் உள்ள அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த வடமராட்சி மக்கள் மீது செல்வீச்சு நடத்தி படுகொலை செய்யப்பட்ட துன்பியல் நிகழ்வின் 32 ஆண்டான இன்று உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி விசேட வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


'ஒப்பிரேசன் லிபரேசன்' இராணுவ நடவடிக்கையை அடுத்து பாதுகாப்பான இடம் தேடி இடம்பெயர்ந்த வடமராசி மக்கள் பெருமளவில் தஞ்சமடைந்திருந்த அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் நூற்றிற்கு மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு பலர் காயமடைந்துள்ளனர்.

இதன்போது சிதைவடைந்து உருக்குலைந்து போயிருந்த பலரது உடல் சிதைவுகளை ஆலய நிர்வாகத்தினரால் ஓரிடத்தில் எரியூட்டப்பட்டிருந்தது.

இத்துன்பியல் சம்பவத்தின் 32 ஆவது ஆண்டை முன்னிட்டு வடமராட்சி மக்கள் சார்பில் குறித்த அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஆத்மா சாந்தி வேண்டி நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #ColomboNo comments

Powered by Blogger.