பேர்லினில் கலாச்சார ஊர்வலத்தில் ஈழத்தமிழர்கள் கலந்துகொள்ள அனுமதி!!

பேர்லின் வாழ் தமிழீழ மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!

எதிர்வரும் 09.06.2019 அன்று
பேர்லின் தலைநகரில் உலக கலாச்சார திருவிழா ஊர்வலம் நடைபெறவுள்ளது(Karneval der Kulturen).
இக் கலாச்சார ஊர்வலத்தில் ஈழத்தமிழர்களாகிய எமக்கும்  கலந்துகொள்ள அனுமதி கிடைத்துள்ளது.

எமது பேர்லின் வாழ் பெரியோர்கள் சிலமுறை கலந்துகொண்டு எமது கலாச்சாரத்தையும், நாகரீகத்தையும், தமிழர்களின் பண்பாட்டையும் உலகிற்கு எடுத்துக்காட்டினார்கள்.
அவர்களின் பணியில் இம்முறை நாமும் கலந்துகொண்டு (Karneval der Kulturen)
உலக அரங்கில் எமது
கலை,கலாச்சாரம், பண்பாடு, நாகரீகத்தை உலகிற்கு எடுத்துக் காட்டுவோம்.

அன்பார்ந்த பேர்லின் வாழ் தமிழீழ மக்களே,

அடக்குமுறைக்குள் உள்ளாக்கப்படும் இனமாக வாழும் ஈழத்தமிழர்களின் அடையாளம் தொடர்ந்தும் சர்வதேச அரங்கில் தனது இருப்பை வெளிப்படுத்தும் வகையில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிப்பதோடு உங்களின் ஆக்கங்களையும் தந்து
இந்த உலக அரங்கில் (Karneval der Kulturen)
எமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், தமிழர்களின் நாகரீகத்தையும் உலகிற்கு எடுத்துக் காட்டுவோம், இது ஒவ்வொரு ஈழத்தமிழர்களின் கடமையாகும்.

ஆக்கங்கள் தர விரும்புவோர் தயவு செய்து கீழ்க்காணும்  ஒருங்கிணைப்பாளர்களுடன் தொடர்புகொள்ளவும், நன்றி.

ஒருங்கிணைப்பு
திரு கேசவன்
01732054844
திரு ரெக்ஸி பெனடிக்ட்
01716762599
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.