தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு வீதிக்கு வருவோம்!!

வயிற்றிலும் விழியிலும் தீப்பற்றி எரிகிறது, சுடும் தழல் தீராது விழிகள் காய்ந்து நம்பிக்கை மட்டும் மீதம் வைத்துக் கொண்டு இன்னும் சோழத் தமிழ் வீரம் பேசிக்கொண்டு இருக்கின்றோம்.
பெருமை மிக்க இனமல்லவா நாம். ஆனால் தாய்நிலத்தில் உறவுகளோடு சேர்ந்து நாமும் மாண்டு எம் தங்கை எரிய அண்ணன் சிதையுற அக்காளும் அம்மையும் வற்புணர அதை நேரில் பார்த்து செத்து மடிந்தோம் , கதறிக் அழுது துண்டுகளாய்ப் போனோம். உயிர் போன வெறும் பிணமாய் நம்பிக்கை மூச்சிழுத்து அத்தனையும் கடந்து புலத்தில் வந்து ஏதிலிகளாய் 10 ஆண்டு நெருங்க இன்னும் பேசிக் கொண்டு இருக்கின்றோம் சோழத்தமிழ் பெருமையினை. ஆனால் தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு வீதிக்கு வருவோம் வாரும் ஐய்யா என்கையில். “ஆள விடு ஊருக்கு போகோணும்” என்கிறார்கள் உறவுகள். மீதம் இருந்தாலும் இன்னும் பிரிவினையில் பதவிச் சூட்டிற்கு பதமாய் இதமாய் இருக்கை கொடு போராடத் தயார் என்கிறார்கள். எதிர்காலம் எண்ணாது வீர வரலாறு பேசிப் பயனில்லை. எம் எதிர்காலமே நாளைய வரலாறு , அதுவே எம் தனித் தமிழீழ தேசம். ஒன்றிணைந்து நாடுகள் வாரியாக மேற்கொள்ளப் படும் கவனயீர்ப்புப் பேரணியில் கலந்து கொள்ளுங்கள் உறவுகளே! என பெல்சியம் அழைைக்கிறது.
-தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.