போயிங் அறிமுகப்படுத்தவுள்ள ஒற்றை விமானி விமானம்.!!

அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனம் புதிதாக உயர் தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள Boeing’ ’797′ ரக விமானத்தில் ஒரே ஒரு விமானியுடன் பறக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.



இந்த விமானம் அடுத்த மாதம் பிரான்ஸில் இடம்பெறவுள்ள 2019 Paris Air Show. இல் அறிமுகப்படுத்தப்படலாம் என ஏவியேசன் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதனை CNBC இணையத்தளம் செய்தியை வெளியிட்டுள்ளது.

விமானத்தில் பிரதான விமானி மற்றும் உதவி விமானி என இருவரே ஹொக்பிட்டில் இருப்பார்கள். எனி Boeing’ ’797′ ரக விமானத்தில் ஒரு விமானியே இருக்கவுள்ளார்.

இதில் என்னவென்றால் ஒருவிமானி விமானத்தில் இருப்பார் ஆனால் மற்றைய விமானி விமான கட்டுப்பாட்டு அலுவலகம் ஒன்றிலிருப்பார் றிமோட் மூலம் சில இயக்கங்களை அவர் இயக்குவார். இவர் ஒரு விமானத்தை மட்டும் இயக்கமாட்டார் நான்கு,ஆறு விமானங்களை கூட இயக்குவார். இதற்கு காரணம் விமான நிறுவனங்களின் செலவைக் குறைக்கவே போயிங் நிறுவனத்தின் புதிய உத்தியாக இருக்கிறது.

போயிங் நிறுவனத்தின் வர்த்தக யுத்தி புதிதாக கண்டுபிடித்து விமானங்களை விற்கவேண்டும் என்று இதனை வாங்கும் விமான நிறுவனங்களை கவரவேண்டும் என்று எமது விமானத்தை வாங்கினால் செலவு குறையும் என்றால் இங்கே தான் வருவார்கள் என்பது Airbus க்கு எதிராக போயிங் நிறுவனத்தின் வர்த்தக உத்தி. ஆனால் இந்த திட்டம் இப்போது கேள்விக்குறியாகவே உள்ளது

காரணம் இரு போயிங் 737 Max 8 விமானங்கள் விபத்துக்குள்ளானதால் பல நாடுகளில் இந்த ரக விமானங்கள் வெய்யிலிலும் மழையிலும், கங்கரிலும் சேவையில் ஈடுபடாது தரித்துநிற்கின்றன. இப்ப MCAS software update செய்யப்பட்டுள்ளது என கூறும் போயிங் நிறுவனம் பரிசோதித்து பறக்க அனுமதியை அமெரிக்காவின் FAA கண்காணிப்பகம் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 ( செ.நிரூஜன்)
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.