வடக்கு கல்வியமைச்சு மீது விசாரணையை தீவிரப்படுத்துங்கள்-சீ.வீ.கே!

வடமாகாண கல்வியமைச்சராக த.குருகுலராஜா பதவியில் இருந்த காலப்பகுதியில் 80 மில்லியன் ரூபாவை கல்வியமைச்சு வீண்விரயமாக செலவிட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துமாறு, வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தால் வடமாகாண பிரதி கணக்காளர் நாயகத்திற்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாகாணசபை நிதியில் 80 மில்லியன் ரூபாவை கல்வியமைச்சு வீண் விரயம் செய்ததென முன்னாள் கல்வியமைச்சர் த.குருகுலராஜா மீது, முதலமைச்சர் நியமித்த விசாரணைக்குழு கண்டறிந்திருந்தது. 40 மில்லியன் ரூபாவை ஆசிரியர்களின் தளபாட கொள்வனவிற்காகவும், 40 மில்லியன் ரூபாவை இரண்டு நாள் செயலமர்விக்காக செலவிட்டதாகவும் கணக்கு காண்பிக்கப்பட்டிருந்தது. வடமாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை விசாரிக்க முதலமைச்சர் நியமித்த விசாரணைக்குழுவின் முன்பாக இந்த விவகாரமும் வந்தது. அந்த விசாரணைக்குழுவின் அறிக்கையில், நிதி செலவிடப்பட்டது வீண் விரயம் என்றும், இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இதுவரை இந்த விவகாரம் விசாரணைக்கு எடுக்கப்படவில்லையென்பதை குறிப்பிட்டு, வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
Powered by Blogger.