2009ஆம் ஆண்டிற்கு முதல் கூட மக்கள் இப்படியான நிலையை அனுபவிக்கவில்லை!!

ஒரு பேருந்திலோ அல்லது தனிப்பட்ட வாகனத்திலோ செல்லும் பயணிகள் 5 இடங்களில் இறங்கி 150 மீட்டர் நடந்து வந்து மீண்டும் வாகனத்தில் ஏறிச் செல்ல வேண்டிய நிலை தற்போது இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.


அத்துடன் 2009ஆம் ஆண்டிற்கு முதல் கூட இப்படிப்பட்ட ஒரு நிலையை மக்கள் அனுபவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

வடக்கு மாகாண கூட்டுறவு பயிற்சி நிறுவனம் வவுனியா மாவட்டம் பூந்தோட்டத்தில் இயங்கி வந்தது.

ஆனால் 09 வருடமாக முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு பயிற்சிகளை வழங்குவதற்காக குறித்த பயிற்சி நிறுவனத்தை இராணுவத்தினர் பயன்படுத்தி வந்தனர்.
இருந்தபோதிலும் தற்போது முன்னாள் போராளி ஒருவர் மாத்திரமே அங்கு இருப்பதுடன் இந்த நிறுவனத்தினை இராணுவத்தினர் தமது சொந்த தேவைக்காக பயன்படுத்தி வருவதாலும், கூட்டுறவு சங்கத்தினால் பயிற்சிகளை வழங்க முடியாது சிரமம் எதிர்கொள்ளப்பட்டு வருவதை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவாரா?

கூட்டுறவு பயிற்சி நிறுவனத்தினை இராணுவத்தினரிடமிருந்து விடுவிப்பது தொடர்பாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும் அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதனை பிரதமர் அறிவாரா?

மேலும் இப்பயிற்சி நிறுவனத்தினை இராணுவத்தினரிடமிருந்து விடுவிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கோரிக்கைகள் விடுத்த போதிலும் அதற்கான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதனையும் பிரதமர் அறிவாரா?

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழ்நிலை தொடர்பாக அல்லது யார் யார் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் என்பதற்கு அப்பால் இன்று மக்கள் மிகப் பெரிய ஒரு சோதனையில் இருக்கிறார்கள்.

குறிப்பாக மன்னார் மாவட்டத்திலிருந்து வவுனியாவிற்கு செல்வதற்கு 80 கிலோமீ்ற்றர் தூரம்.

ஒரு பேருந்திலோ அல்லது தனிப்பட்ட வாகனத்திலோ செல்லும் பயணிகள் 5 இடங்களில் இறங்கி 150 மீட்டர் நடந்து அவர்கள் வந்து ஏறிச் செல்ல வேண்டிய நிலை தற்போது இருக்கின்றது.

2009ஆம் ஆண்டிற்கு முதல் கூட இப்படிப்பட்ட ஒரு நிலை எங்களுடைய மக்கள் அனுபவிக்கவில்லை.

அதே போல மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் செல்கின்ற பாதை, வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்கின்ற பாதை, வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு செல்கின்ற பாதை போன்ற எல்லா இடங்களிலும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அருகில் குறிப்பாக மன்னாரிலிருந்து வவுனியாவிற்கு 5 இடங்களில் சோதனைச் சாவடியில் இராணுவத்தினர் மக்களை இறக்கி 150 மீற்றர் தூரம் நடக்கவிட்டு தான் அவர்களை ஏற்றுகிறார்கள்.

இது உண்மையில் அவசரகால தடைச்சட்டத்தின் கீழ் யாரை விசாரிக்க வேண்டுமோ அவர்களை விசாரிக்காமல் உண்மையில் மக்களுக்கு ஒரு நேரடியாக ஒரு மிகப்பெரிய கஷ்டத்தை கொடுக்கின்ற நிலை தான் இருக்கின்றது.

இந்த சோதனைச் சாவடிகளில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை குறைத்து அவர்கள் ஒரு தங்களுடைய பயணங்களை இலகுவாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா என்பதை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.