பிரான்சில் மூத்த ஊடகவியலாளர் முத்துலிங்கம் ஐயா அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு!📷

பிரான்சில் கடந்த 20.05.2019 திங்கட்கிழமை சாவடைந்த மூத்த ஊடகவியலாளரும், பன்மொழிபெயற்பாளருமான அமரர் அருணாசலம் முத்துலிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வுகள் நேற்று 22.05.2019 புதன்கிழமை 95 Rue Marcel Sembat 93430 Villetaneuse மயானத்தில் காலை 9.30 மணி தொடக்கம் இறுதிக் கிரிகைகள் இடம்பெற்று 13.30 மணிக்கு உடல் தகனம் செய்யப்பட்டது.


இந்நிகழ்வில் பலரும் ஐயாவுடனான தமது அனுபவங்களைப் உரிமையோடு பகிர்ந்துகொண்டனர்.

ஊடகவியலாளர் முத்துலிங்கம் ஐயா அவர்கள் யாழில் வெளிவரும் பத்திரிகை ஒன்றில் மொழிபெயர்ப்பாளராகவும் நூலகராகவும் நீண்டகாலம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய ‘தமிழில் கஜனி’ என்ற மொழிபெயர்ப்பு கட்டுரை தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் வாய்ந்தது. அத்தோடு தமிழீழ விடுதலைப் பயணத்திற்கும் இவருடைய பணி காத்திரமாக அமைந்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. இவருடைய உன்னதமான பணி தமிழ்த் தேசியப் பரப்பிலும் ஊடகப் பரப்பிலும் இட்டுநிரப்ப முடியாத ஒன்றாகும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #ColomboPowered by Blogger.