ரிலீஸுக்குத் தயாராகும் ஜி.வி.பிரகாஷின் அடுத்தப் படம்!

ஜி.வி.பிரகாஷ், மஹிமா நம்பியார் நடித்த ஐங்கரன் படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.


இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக மாறிய ஜி.வி.பிரகாஷ், தமிழ்த் திரையுலகில் மினிமம் கியாரண்டி ஹீரோவாகத் தனக்கென ஓர் இடத்தை அடைந்துள்ளார். இவ்வருடத்தின் தொடக்கத்திலிருந்து சர்வம் தாள மயம், குப்பத்து ராஜா, வாட்ச்மேன் என ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்த மூன்று படங்கள் வெளியாகியுள்ளது. இவற்றில் வசூல் ரீதியாக முதலில் வெளியான சர்வம் தாள மயம் நல்ல வரவேற்பையும், குப்பத்து ராஜா தோல்வியையும், வாட்ச்மேன் ஆவரேஜ் ஓப்பனிங்கையும் பெற்றது.

இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷுன் அடுத்த படமான ஐங்கரன் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. ஈட்டி படத்தின் இயக்குநர் ரவி அரசு இயக்கிய இந்தப் படத்தில் மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், காளி வெங்கட், சித்தார்த்தா சங்கர், ரவி வெங்கட்ராமன், ஹரீஷ் பேரடி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். ஜனவரி மாதமே வெளியாக வேண்டிய இந்தப் படம், இறுதிக் கட்டத் தயாரிப்பு பணிகளால் தாமதமானது. தற்போது இதன் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால், இனிவரும் நாட்களில் இந்தப் படத்தின் புரொமோஷன் பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை காமன்மேன் பிரசன்ஸ் சார்பில் பி.கணேஷ் தயாரித்துள்ளார்.

தற்போது நடிகராக மட்டும் ஜி.வி.பிரகாஷ் கைவசம் பல்வேறு தயாரிப்பு நிலைகளில் 100% காதல், வசந்த பாலனின் ஜெயில், 4 ஜி, அடங்காதே, சித்தார்த்துடன் இணைந்து நடிக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை, ரைசா வில்சனுடன் நடிக்கும் காதலிக்க யாருமில்லை மற்றும் பெயரிடப்படாத எழில் இயக்கும் புதிய படமென ஏழு படங்களுக்கு மேல் வைத்திருக்கிறார். இவ்வருட இறுதியில் அதிக படங்களில் நடித்த கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ் இருப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.