இருளா மொழியில் உருவான இந்தியாவின் முதல் படம்!

பிரபல மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளரான கோகுலம் கோபாலன் நடித்த நேதாஜி என்ற திரைப்படம் இருளா பழங்குடி மொழியில் உருவான இந்தியாவின் முதல் படம் என்ற கின்னஸ் சாதனையைப் புரிந்துள்ளது.
நேற்று முன்தினம் (மே 21) நேதாஜி படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
தமிழில் கமல்ஹாசன் நடித்த தூங்காவனம், மலையாளத்தில் மம்முட்டி நடித்த பழசிராஜா, மோகன்லால் நடித்த காயம்குளம் கொச்சுன்னி போன்ற படங்களைத் தயாரித்தவர் கோகுலம் கோபாலன். 74 வயதான இவர், கதாநாயகனாக நடிக்கும் படமே நேதாஜி.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்தியன் நேஷனல் ஆர்மியில் பணியாற்றிய வீரரான கோகுலம் கோபாலன் நீலகிரியில் வாழும் இருளர் பழங்குடி மக்களுடன் வாழ்ந்து வருகிறார். அவரை சந்திக்க நகரத்திலிருந்து வரும் அவரது பேரனுடனான உறவை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படம் முழுக்க இருளர் பழங்குடி மக்கள் பேசும் இருளா மொழியிலேயே உருவாகியிருக்கிறது. மேலும் இருளா பழங்குடி மொழியில் உருவான இந்தியாவின் முதல் படம் என்ற கின்னஸ் சாதனையையும் நேதாஜி திரைப்படம் புரிந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.