பல்லின மக்களுடன் இணைந்து யேர்மனியில் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச தொழிலாளர் தினம்!!

எமது ஈழத்தில் ஏற்ப்பட்ட தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் பதாதைகளை தாங்கியவண்ணம் கவனயீர்ப்பை ஏற்படுத்தினர்கள். பேரணியில் யேர்மன் மொழியில் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை வழங்கி பல்லின சமூகத்திடம் விழிப்புணர்வை
மேற்கொண்டார்கள். யேர்மன் தலைநகரமான பேர்லினில் இடம்பெற்ற மே தின பேரணியில் தமிழீழ இசைப் பாடல்களும் வேற்றின அமைப்புகளின் ஆதரவுகளுடன் ஓங்கி ஒலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க ஒர் விடயமாகும். மேலும் டீசில்டோப் ,பேர்லின்,பிராங்பேர்ட், சுற்க்காட், சார்பூருக்கன், கம்பேர்க், கால்சூல்வை பிரதானமான நகரங்களில் அதிகளவில் பங்கேற்றனர்.
மேலும் விசேடமாக பிராங்பேர்ட் ,டீசில்டோப் நகரத்தில் தமிழ் பெண்கள் அமைப்பினரால் தாயக உறவுகளின் வாழ்வாதாரத்திற்காக தமிழீழ உணவக நிலையங்கள் அமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் புதிய சமூகத்தில், உழைக்கும்மக்கள் மத்தியில் பொருளாதார சமத்துவம் நிலவவேண்டும்.”,தமிழீழதேசியத் தலைவர். சர்வதேச முதலாளித்துவ பொருளாதார வர்க்கம் ஒரு புறம், இனவாத,சர்வாதிகார ஒடுக்கு முறைக்கும் இடையில் மக்கள் புது உலகம் என்றுசொல்லப்படும், இரண்டாம் உலகப்போருக்கு பின் இன்றுவரை பல வருடங்களாக ஆதிகார சக்திகளுக்கு ஆட்பட்டு உலகெங்கும்இனப்படுகொலைகளும் ஏழ்மையும் தலைவிரித்து ஆடுகிறது.

#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை