ஹக்னி பகுதியில் கத்திக்குத்து!!


லண்டன், ஹக்னி பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் 15 வயதுச் சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 9 மணியளவில் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்ட பொலிஸார் மற்றும் அவசரசிகிச்சைப் பிரிவினர் கத்திக்குத்துக்கு இலக்கான சிறுவனுக்கு அவசரமுதலுதவி வழங்கியுள்ளனர். இதையடுத்து அங்கு வரவழைக்கப்பட்ட வான்வழி அம்புலன்ஸ் பிரிவினர் வழங்கிய சிகிச்சையும் பயனளிக்காத நிலையில் தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லையென தெரிவித்துள்ள பொலிஸார் இச்சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தகவல் தெரிவிக்க முன்வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். நேற்றையதினம் கிழக்கு லண்டனில் இடம்பெற்ற இன்னுமொரு கத்திக்குத்துத் தாக்குதலில் 16 வயதுச் சிறுவனொருவன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.