தொடர் படுகொலை எதிரொலி: சைப்ரஸ் நீதி அமைச்சர் இராஜினாமா!


தொடர் கொலைளை அடுத்து எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து சைப்ரஸ் நீதி அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தலைநகரின் மேற்கு பகுதிகளிலிருந்து கடந்த மூன்று வாரங்களில் நான்கு பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதேவேளை, ஆறு மற்றும் எட்டு வயதுடைய இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் காணாமல் போயுள்ளமை தொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 35 வயதான ராணுவ அதிகாரி ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தொடர் படுகொலைகளை குறித்த சந்தேகநபர் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.