சிங் பொன்னையாவின் பூதவுடல் ஹட்டன் டன்பார் மைதானத்தில் தகனம்!!

முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரான, காலஞ்சென்ற சிங் பொன்னையாவின் பூதவுடல் ஹட்டன் டன்பார் மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகருமான சிங் பொன்னையா, தனது 73 ஆவது வயதில் கடந்த 25 ஆம் திகதி உயிரிழந்தார். சென்னை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்தார். இந்நிலையில், இவரின் இறுதிக் கிரியைகள் நேற்று (திங்கட்கிழமை) ஹட்டனில் நடைபெற்றது அன்னாரின் பூதவுடலுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பினரும் அஞ்சலி செலுத்தி வந்தனர். அந்தவகையில் அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க, இராதாகிருஷ்ணன், இராஜாங்க அமைச்சர் லக்கி ஜெயவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், கே.கே.பியதாஸ, அரவிந்தகுமார், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், பிரமுகர்கள் ஆகியோர் தமது அஞ்சலியை செலுத்தினார்கள். இதனையடுத்து, அவரது பூதவுடல் ஹட்டன் டன்பார் மைதானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. உயிரிழந்த சிங் பொன்னையா, அமைச்சர் திகாம்பரத்தின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.