ரவி கருணாநாயக்க இல்லையென வெளிப்படுத்தியது என்ன??

யுத்த காலத்தில் தமிழ் மக்கள் எவ்வாறு பார்க்கப்பட்டார்களோ அதேபோன்றதொரு நிலைமை தற்போது முஸ்லிம் மக்களுக்கும் ஏற்பட்டுள்ளதென அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

 நாட்டின் தற்போதை சூழ்நிலை குறித்து நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ரவி கருணாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையானது சிங்கள, பௌத்த நாடாக இருந்தாலும் ஏனைய சமூகத்தவர்களின் மதம், மொழி ஆகிவற்றுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதனை அனைவரும் முதலில் கருத்திற்கொள்ள வேண்டும். இதனை ஏற்க மறுக்கும் ஒரு சிலரினாலேயே நாட்டின் ஐக்கியத்தை கட்டியெழுப்ப முடியாத நிலைமை உருவாகியுள்ளது. 

இதேவேளை நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலை நடத்தியவர்கள் முஸ்லிம் பயங்கரவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளமையினால், ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலைமை உருவாகியுள்ளமை கவலையளிக்கிறது” என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.