சட்டவிரோதமாக இந்தோனேசியாவுக்கு செல்ல முயன்ற74இந்தோனேஷிய குடியேறிகள் கைது!!

மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக இந்தோனேசியாவுக்கு செல்ல முயன்ற 74 இந்தோனேஷிய குடியேறிகளை மலேசிய கடல்சார் அமலாக்க முகமை கைது செய்துள்ளது.


கடந்த வார இறுதியில், மலேசியாவின் புலோ ஜராக் தீவு அருகே அமலாக்க முகமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது, சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த படகை பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர்.

அப்போது, படகோட்டியும் படகிலிருந்து பணியாளர்கள் உள்ளிட்ட மூன்று பேர் கடலில குதித்து தப்ப முயன்றுள்ளனர். அதில் ஒருவர் சிக்கிய நிலையில், இருவர் தப்பியுள்ளனர்.

அதே சமயம், படகில் நடத்தப்பட்ட சோதனையில் மறைந்திருந்த 74 இந்தோனேசியர்கள் சிக்கியதாக அமலாக்க முகமையின் இயக்குனர் கேப்டன் வன் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

“அதிலிருந்த 57 ஆண்கள், 15 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உள்ளிட்ட 74 பேரும் இந்தோனேசியாவின் டன்ஜூங் பலாய் (Tanjung Balai) பகுதிகக்கு செல்ல முற்பட்டிருக்கின்றனர்,” என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மலேசியாவின் புலோ ஜராக் தீவிலிருந்து இந்தோனேசியாவின் டன்ஜூங் பலாய் (Tanjung Balai) பகுதியை அடைவதற்கு இடையில் உள்ள குறுகிய கடல்வழியான மலாக்கா நீரிணையை கடக்க வேண்டும்.

அப்படி கடக்க முயன்ற பொழுதே, இந்தோனேசிய குடியேறிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த சூழலில், குடியேறிகள் சென்ற படகிலிருந்து துணிப்பைகள், கடவுச்சீட்டுகள், இன்னும் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மலேசியாவில் சட்டவிரோதமாக பணியாற்றி வந்த குடியேறிகள், ரமலான் பெருநாளை முன்னிட்டு இந்தோனேசியாவுக்கு செல்ல முயன்றிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

குடியேறிகளை அனுப்பும் வைக்கும் பயணத்தை, மலேசியா மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஆட்கடத்தல்காரர்கள் செய்திருக்கக்கூடும என அமலாக்க முகமையின் இயக்குனர் கூறியுள்ளார்.

“பயணிப்பவர்களின பாதுகாப்பை கண்டுக்கொள்ளாமல் ஒரு நபருக்கு 1,000 முதல் 1,500 மலேசிய ரிங்கட் வரை (16,000 முதல் 25,000 இந்திய ரூபாய் வரை) பெற்றுக்கொண்டு ஆட்கடத்தல்காரர்கள் பெரும் இலாபமடைக்கின்றனர்,” என அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.