மண்முனைப்பற்று பிரதேசசபை சுகாதார ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேசசபையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் இன்று காலை முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


மண்முனைப்பற்று பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டும் பகுதியான புதுக்குடியிருப்பு திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு செல்லும் வீதி கடும் மோசமான நிலையில் இருப்பதால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தே குறித்த பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் மண்முனைப்பற்று பிரதேசசபை செயலாளர் மற்றும் தவிசாளரின் கவனத்திற்கு பல தடவைகள் கொண்டு செல்லப்பட்ட போதிலும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லையெனவும் ஊழியர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 


No comments

Powered by Blogger.