யாழில் மாணவர்களை தீவிரவாதிகள் போல் கடும் கெடுபிடி!

மாணவர்களை தீவிரவாதிகள் போல சோதனை செய்கிறார்கள் இவ்வாறாக யாழில் இராணுவ மயமாக்கல் ஆக்கியிருக்கிறார்கள் தமிழ் அரசியல் வாதிகள். இதற்கு மாற்று திட்டம் நிச்சயம் தேவை.


எத்தனையோ சிறுவர் உரிமை அமைப்புக்கள் உள்ளன. ஆனால் அவை இதை பற்றி ஏன் குரல் எழுப்பவில்லை?

கல்வியாளர்கள் கூட இதை ஆதரிக்கின்றனர். இவ்வாறு சோதனை செய்து பிள்ளைகளின் ஆள்மனதில் நாம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றோம். என்னை பொருத்தவரை அடிப்பதை விட இவை எதிர்காலத்தில் மோசமான நிலமைகளை பிள்ளைகள் மீது ஏற்படுத்தும்.

நாட்டின் பாதுகாப்பு முக்கியம், மக்களின் பாதுகாப்பு முக்கியம் அதற்காக ஏதுமறியாத சிறுவர்களை தீவிரவாதிகள் போல பார்க்க முடியாதே!


Powered by Blogger.