எனது இன்னொரு முகம் கட்சியினருக்கு கமல் எச்சரிக்கை!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் வாக்குகளை வாரிக் குவித்திருக்கிறது.


கோவை, வடசென்னை, தென் சென்னை உள்ளிட்ட தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகளைத் தாண்டிய மக்கள் நீதி மய்யம் பல தொகுதிகளில் ஒரு லட்சத்தைத் தொடும் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இது நாங்களே எதிர்பாராத வாக்குகள் என்று தேர்தல் முடிவுகளுக்குப் பின் கமல்ஹாசனே சொல்லும் அளவுக்கு மக்கள் நீதி மய்யத்தை ஆதரித்திருக்கிறார்கள் மக்கள்.

தேர்தல் முடிவுகளுக்குப் பின் தனது பொறுப்பு கூடியிருப்பதை உணர்ந்திருக்கும் கமல்ஹாசன், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் சில வேட்பாளர்களைச் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்திற்கு மே 23 மாலையே அழைத்துப் பேசியிருக்கிறார்.

“நாம் நல்ல வாக்குகள் பெற்றிருக்கிறோம். டெல்டா மாவட்டம், வடமாவட்டங்களில் வாக்குகளை மிகக் குறைவாகப் பெற்றுள்ளோம். அதற்கான காரணம் என்னவென்று ஆலோசிப்போம்.

தேர்தல்தான் முடிந்துவிட்டதே, இனி அடுத்த தேர்தலுக்கு மக்களிடம் போனால் போதும் என்று ஒதுங்கிக்கொள்ள வேண்டாம். தினந்தோறும் மக்கள் பணி செய்யுங்கள். மக்களின் குறையைக் கேளுங்கள், ஒவ்வொரு நாளும் களத்தில் நில்லுங்கள். தொகுதிக்குச் சென்று மக்கள் குறையைக் கேட்டுச் செய்யுங்கள். அப்படி முடியாதவர்கள் ஒதுங்கிக்கொள்ளலாம்” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிய கமல்ஹாசன் தொடர்ந்து பேசியிருக்கிறார்.

“மக்கள் கூப்பிடும் நேரத்திற்கு போய் குறைகளைக் கேளுங்கள். என்னை அதிகாலை 4 மணிக்கு அழைத்தாலும் வருவேன், இரவு 12 மணிக்கு அழைத்தாலும் வருவேன், அதுபோல் நீங்களும் மக்கள் பணிக்குத் தயாராகிக்கொள்ளுங்கள். இந்தத் தேர்தலில் நமக்குக் கிடைத்தது பெரிய வெற்றிதான். 16 தொகுதிகளில் மூன்றாவது இடத்தில் வந்திருக்கிறோம். நம்பிக்கையுடன் மக்கள் பணியைத் தொடருங்கள். மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுச் சிறப்பாக வேலை செய்தவர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் வாய்ப்புகள் உண்டு” என்று கூறியுள்ளார் கமல்.

பாராட்டு, அறிவுரை மட்டுமல்ல கமலிடமிருந்து முக்கியமான எச்சரிக்கையும் வந்திருக்கிறது.

“இந்தத் தேர்தலில் கோடை வெயிலென்றும் பாராமல் கடுமையாக வேலை செய்தது யார், நிழலில் நின்றது யார், வேலை செய்யாமல் ஏமாற்றியது யார் என்றெல்லாம் எனக்குத் தெரியும். ஆனால், அவர்கள் பெயர்களைக் குறிப்பிட நான் விரும்பவில்லை. இனியும் இப்படி இருக்கக் கூடாது. என்னுடைய ஒரு முகத்தைத்தான் பார்த்திருக்கீங்க. இன்னொரு முகத்தை நீங்கள் பார்த்ததில்லை. அது பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கும் முகம். நமது பொறுப்பு கூடியிருக்கிறது. 14 மாதத்தில் நம்மை மக்கள் இவ்வளவு வாக்குகள் கொடுத்து ஆதரித்திருக்கிறார்கள்.அதற்கேற்றமாதிரி நாமும் நடக்க வேண்டும். இல்லையென்றால் கட்சியிலிருந்து நீக்கவும் தயங்க மாட்டேன்” என்று எச்சரிக்கை விட்டிருக்கிறார் கமல்ஹாசன்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.