பெண்ணை பலாத்கார மிரட்டிய பிரபல தொலைக்காட்சி நடிகர் கைது!

பாலியல் பலாத்கார வழக்கில் பிரபல தொலைக்காட்சி நடிகர் கரண் ஓபராய் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தி தொலைக்காட்சி நடித்து வருபவர் நடிகர் கரண் ஓபராய். இவர் தொலைக்காட்சி தொடர் மட்டுமின்றி  பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2017ம் ஆண்டு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

karan obray
மேலும் அவர் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து அந்த பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் கொடுக்காவிட்டால் அந்த வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். 
கரண் ஓபராய்
இதையடுத்து அந்த பெண் இன்று மும்பை ஓஷிவாரா பகுதி காவல் நிலையத்தில் கரண் ஓபராய் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கரண் ஓபராய் மீது இபிகோ 376,384 ஆகிய செக்‌ஷன்களில் பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

No comments

Powered by Blogger.