சிகிச்சை முடிந்து படப்பிடிப்புக்கு திரும்பிய விஷ்ணு விஷால்!

visnhuநடிகர் விஷ்ணு விஷால் சண்டைக் காட்சியில் ஏற்பட்ட காயம் காரணமாகப் படத்தில் நடிக்காமல் ஓய்விலிருந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். 
கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் பிரபு சாலமன் கும்கி-2' படத்தை இயக்கி வருகிறார். அதே நேரத்தில்  `ஹாதி மெரே சாதி' என்ற இந்தி படத்தைத் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் இயக்கி வருகிறார். ஈராஸ் இன்டர்நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் விஷ்ணு விஷால் - ராணா டகுபதி இணைந்து நடித்து வருகின்றனர்.


இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மூணாரில் முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின் போது விஷ்ணு விஷாலுக்கு காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் காயம் காரணமாகக் கடந்த சில மாதங்களாகப் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் ஓய்வு பெற்றுவந்த நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பில் இணைந்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, மீண்டும் பிரபு சாலமன் படத்தில் இணைந்திருக்கிறேன். விட்ட இடத்திலிருந்து படப்பிடிப்பைத் துவங்கியிருக்கிறேன் என்று கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.