ரிசாட் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை பிற்போடப்பட்து!!

ரிசாட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த மாதம் 17,18ம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று சபையில் அறிவித்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதற்கு பலத்த எதிர்ப்பு வெளியிட்டனர். முன்னதாக கட்சி தலைவர்கள் கூட்டத்தில் யூன் 17,18ம் திகதிகளில் விவாதத்தை நடத்தலாமென ஆளுந்தரப்பு கோரியிருந்தது. அதற்கு முன்பாக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைத்து, அதன் அறிக்கை மூன்று வாரங்களில் சமர்ப்பிக்கப்பட்டதும், விவாதத்தை நடத்தலாமென தெரிவித்திருந்தது. ஆளுந்தரப்பின் கோரிக்கையை ஏற்று, ஜூன் 17,18ம் திகதிகளை விவாத திகதிகளாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
Powered by Blogger.