சிறைக்கைதியான லக்மின இந்திக பமுனுசிங்கவின் கோரிக்கை நிறைவேற்றம்!📷

சிறைச்சாலையில் இருந்தவாறே சமூக விஞ்ஞான முதுமானிப் பட்டப்படிப்பை நிறைவு செய்து களனி பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொண்டு வருவதுடன், 2005ஆம் ஆண்டு இலங்கை குத்துச் சண்டை மெய்வல்லுனராக முடிசூட்டிய அவர், இவ்வருட தேசிய குத்துச் சண்டை மெய்வல்லுனர் போட்டியிலும் கலந்துகொள்ள எண்ணியுள்ளார்.


வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 762 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சிறைச்சாலை வளாகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்களை சந்தித்த லக்மின இந்திக பமுனுசிங்க தனது பட்டப்படிப்புக்கு தேவையான செயற்திட்ட அறிக்கைகைய தயாரிப்பதற்கு தேவையான நிதியை பெற்றுத்தருமாறும் எதிர்வரும் தேசிய குத்துச் சண்டை மெய்வல்லுனர் போட்டியில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அவரது அந்த கோரிக்கை தொடரில் கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், செயற்திட்ட அறிக்கைக்கு தேவையான பணத்தை துரிதமாக வழங்குவதாக தெரிவித்ததுடன், போட்டியில் கலந்துகொள்வதற்கான சாத்தியங்கள் தொடர்பில் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சருக்கு பணிப்புரை விடுத்தார்.


No comments

Powered by Blogger.