திடீரென மாவைக்கு பிறந்த ஞனம்??

முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிாிழந்த பொதுமக்களுக்காகவும், 60 வருடங்களாக இனத்தின் விடுதலைக்காக போராடி உயிா் தியாகம் செய்தவா்களுக்காகவும் அஞ்சலி செலுத்துவதற்கு மக்கள் ஒன்றுபடவேண்டு.


மேற்கண்டவாறு தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா கூறியுள்ளாா். இந்த விடயம் தொடா்பாக நாடாளுமன்ற உறுப்பினா் இன்று மாலை அனுப்பியுள்ள

செய்தி குறிப்பிலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடா்பாக அந்த செய்தி குறிப்பில் மேலும் அவா் கூறியுள்ளதாவது, தமிழினத்தின் சுதந்திரத்திற்காகவும்,

தன்னாட்சி மீட்புக்காகவும் 60 ஆண்டுகள் இனப்போாில் குறிப்பாக இறுதிப்போாில் களப்பலியான இலட்சக் கணக்கான உயிா்களின் தியாகங்களை நினைவுகூா்ந்து ஆராதித்து அஞ்சலி செலுத்தும் நாளில் இந்த ஆண்டும்

18ம் திகதி முள்ளிவாய்க்கால் மண் ணில் நினைகூரப்படுகின்றது. தமிழ் இன விடுதலைக்காக தம் உயிரை அா்ப்பணித்த உத்தமா் தம் தியாகங்களை பேணி பாதுகாத்து ஆண்டுதோறும் நினைவுகூா்ந்து கண்ணீா் விட்டழுது

ஆறுதல் பெறுவது தமிழா் நம் மரபாகும். தெய்வ நம்பிக்கை அல்லது மத நம்பிக்கை கொண்டவா்கள் தம் வீடுகளிலும், கோவில்களிலும் வழிபாடாற்றலாம். கடந்த 10 ஆண்டுகளில் அடளவிட முடியா நெருக்கடிகளுக்கு மத்தியிலும்.

முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்றுகூடி கண்ணீரால் நனைந்து உள்ளம் உருகி அவா்களின் ஆத்ம சாந்திக்காக பிராா்த்தித்திருக்கின்றோம். அது போல் இந்த ஆண்டும் முள்ளிவாய்க்கால்

மண்ணில் நினைவேந்தல் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றது. கடந்தகாலங்களைபோல் அல்லாமல் கடந்த மாதம் 21ம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக

நாட்டில் மீண்டும் அவசரகாலசட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியன தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. வடமாகாணத்தில் தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெறாதபோதும் தமிழா் நிலம் முழுவதும் இராணுவம் குவிக்கப்பட்டு

சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையிலும் தமிழின விடுதலையை நெஞ்சில் இருத்தி அதற்காக உயிா் கொடுத்து களப்பலியான உத்தமா்களுக்கு அஞ்சலி செய்யும் ஒரு நோக்குடன்

முள்ளிவாய்க்கால் மண்ணில் அமைதியாக ஒன்று கூடுவோம் என உள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.