ஹிஸ்புல்லாவின் மற்றுமொரு இரகசியம் சிக்கியது!

மன்னார் ஓலைத்தொடுவாய் உவரி பகுதியில் உள்ள சுமார் 508 ஏக்கர் காணிகள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தினூடாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.இந்த காணிகள் தொடர்பாகவும் இந்த காணிகள் கொள்வனவு தொடர்பாகவும் பெரும் சந்தேகம் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

குறித்த காணி தொடர்பில் இன்றைய தினம் மக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து அப்பகுதி விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள், பல பொது மக்களின் காணிகளை அடாத்தாகவும் அதே நேரத்தில் யுத்தம் காரணமாக இந்தியாவிற்கு இடம் பெயர்ந்த மக்கள் காணிகளில் இல்லாமை காரணமாக அவர்களுடைய காணிகளையும் அடாத்தாக கொள்வனவு செய்துள்ளனர்.

தொடர்ந்து இங்குள்ள முஸ்லிம் நபர்களுடைய பெயர்களில் பெயர் மாற்றம் செய்து பல இடங்களில் பல ஏக்கர் காணிகளை முஸ்லிம் அரசியல்வாதிகள் கொள்வனவு செய்திருக்கின்றனர்.

குறிப்பாக தற்போது கிழக்கில் ஆளுனராக உள்ள ஹிஸ்புல்லா அவர்கள் மன்னார் ஓலைதொடுவாய் உவரி என்ற பிரதேசத்தில் உள்ள 508 ஏக்கர் காணியை தனியார் நிறுவனம் ஒன்றின் பெயரில் கொள்வனவு செய்துள்ளார்.

அந்த நிறுவனத்தின் இயக்குனராக ஹிஸ்புல்லா இருக்கின்றார், அதன் பெயரில் 508 ஏக்கர் காணிகளை 2013 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 508 ஏக்கர் காணிகளை கொள்வனவு செய்வதற்கு குறித்த நிறுவனத்திற்கு நிதி எவ்வாறு கிடைத்தது, குறித்த அரசியல்வாதிக்கு எந்த அரபு நாட்டில் இருந்து எந்த செல்வந்தர் நிதி வழங்கினார் என்பது தொடர்பாக அரசாங்கம் உடனடியாக கவனத்தில் எடுக்க வேண்டும்.

இதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்கலைக்கழகம் ஒன்று ஜனாதிபதியினால் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

அதற்கு சவுதியை சேர்ந்த தனிப்பட்ட நபர் ஒருவர் ஹிஸ்புல்லாவிற்கும் அவருடைய மகனுக்கும் சொந்தமான நிறுவனம் ஒன்றிற்கு பெரும்தொகையான பணம் அனுப்பியிருக்கின்றார். அதன் மூலம் பல்கலைக்கழகம் கட்டப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள முஸ்லிம் மத தீவிரவாத அமைப்புக்களால் கத்தோலிக்க மக்களை குறிப்பாக இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றது.

இந்த உவரிப்பகுதியும் ஒரு கத்தோலிக்க கிராமமாகும். இங்கிருந்த மக்கள் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து இந்தியாவிலும் வேறு பகுதிகளிலும் இருக்கின்றார்கள்.

ஆரம்பத்தில் இது தமிழ் மக்களுடைய கிராமம், அதற்கு அடையாளமாக 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அந்தோனியார் ஆலயம் இங்கு இருக்கின்றது.

ஆக இப்படியான நில ஆக்கிரமிப்புக்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசாங்கத்தில் அங்கம் வகித்துகொண்டு, தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்து, அரபு நாடுகளில் உள்ள தனிப்பட்ட நபர்களின் நிதிகளை பெற்று, தாங்களும் அந்த பணத்தில் சுக போகத்தை பெற்று, இங்குள்ள தமிழ் மக்களின் காணிகளை எந்த அடிப்படையில் கொள்வனவு செய்கின்றார்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.