வைக்கோல் ஓவியம் 110.7 மில்லியன் ஏலம்!!

பிரான்ஸின் புகழ்பெற்ற ஓவியர் கிளாட் மொனெட் வரைந்த வைக்கோல் ஓவியம் 110.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பிரான்ஸினைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் கிளாட் மொனெட். நார்மண்டி பகுதியில் வசித்து வந்த இவர் கடந்த 1890-ம் ஆண்டு, கிராமப்புற வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் வைக்கோல் போரை ஓவியமாக தீட்டினார்.

கிளாட் மொனெட் வரைந்த ஓவியங்களில் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த ஓவியம் வௌ;வேறு நாடுகளில் ஏலத்தில் விடப்பட்டு, பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகியிருந்தன.

இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள சோத்பி ஏல நிறுவனம் கிளாட் மொனெட்டின் வைக்கோல் ஓவியத்தை அண்மையில் ஏலத்தில் விட்டது.

ஏலம் ஆரம்பமாகி 8 நிமிடங்களில் இந்த ஓவியம், 110.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் போனது.

இந்த ஓவியம் 100 மில்லியன் டொலருக்கு அதிகமாக ஏலம் போனது இதுவே முதல் முறையாகும்.

இதேவேளை, கிளாட் மொனெட்டின் ஓவியங்களில் அதிக விலைக்கு விற்பனையான ஓவியம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.