பறக்கும் கார் சோதனை முயற்சி வெற்றி!

மின்கலம் மூலம் இயங்கக்கூடிய பறக்கும் காரை ஜேர்மனிய நிறுவனம் ஒன்று வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.


போக்குவரத்து நெரிசல்களுக்கு தீர்வுகாணும் வகையில் வானில் பறந்து செல்லும் கார்களை உருவாக்கி குறுகியதூர வான்வழிப் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன.

ஜேர்மனியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, பறக்கும் காரை 2025-ம் ஆண்டுக்குள் போக்குவரத்துச் சேவைக்கு அறிமுகப்படுத்தும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 5 இருக்கைகளை கொண்ட, மின்கலம் மூலம் இயங்கும் பறக்கும் காரை அந்நிறுவனம் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

தற்போதுள்ள மின்கல தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த பறக்கும் கார் மணிக்கு 300 கிலோ மீட்டர் வரை பறக்கும் இயல்புடையது என கூறப்படுகின்றது.

No comments

Powered by Blogger.