நோர்வேயில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு நிகழ்வு!!(படங்கள்)

முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி வாரத்தின்  அடையாள காட்சிபடுத்தல் நோர்வே நாட்டடில் இன்று இளையோர்களால் மேற்காள்ளப்பட்டது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு  நிகழ்வில் இடம்பெற்ற படுகொலையை நாடகம் மூலம் கருத்து வெளிப்பாட்டினை நோர்வே வாழ் மக்களுக்கு வெளிப்படுத்தினர்.எமது போராட்டத்தின் வெற்றியானது எமது கையில்,எமது பலத்தில்,எமது உறுதிப்பாட்டிலேயே தங்கியிருக்கிறது.என்ற எமது தேசியத் தலைவரின் சிந்தனையை ஒவ்வொரு ஈழத்தமிழரும் நினைவில் நிறுத்தி இந்த முள்ளிவாய்க்கால் 10ம் ஆண்டு நினைவெழுச்சி வாரத்திலும் 18.05.2019 மாலை 2 மணிக்கு ஆரம்பமாகும் நினைவெழுச்சிப் பேரணியிலும் கலந்துகொண்டு தமிழீழம் நோக்கி வீறுகொண்டெழுவோம். என்னும் செய்தியினை மக்களுக்கு கூறிக்கொண்டு  நிறைவு செய்தனர்.
Powered by Blogger.