நீ என் கதை சொல்வாய்..!!

எழுதமுடியாத எழுதப்பட வேண்டிய ஈழத்தமிழரின் இரத்த சரித்திரம் சிங்களத்தின் திட்டமிட்ட நாடகங்களால் மூடிமறைக்கப்படுகின்றது.


உறங்காத கண்மனிகளாய் இருக்கும் தூங்காத இரவுகளாய் இருக்கும் எமது உறவுகளுக்கான கண்ணீரின் கனதியான நாள் சிங்களத்தின் திட்டமிட்ட நாடகங்களால் மூடிமறைக்கப்படுகின்றது

றிசாட்டையோ ஹீஸ்புல்லாவோயோ துரத்தாத அவசரகாலச் சட்டம் அப்பாவி விவசாயியையும் நடைவண்டி வியாபாரியையும் துரத்துவது சிங்களத்தின் திட்டமிட்ட நாடகமே

அடிப்பது வன்முறையெனின் அழுவோம் அழுவதும் வன்முறையெனின் என் செய்ய எழுவோம் எழுவோம்

ஆயிரமாயிரம் பிணங்களை அணைத்து தூங்கியதை எப்படி மறக்க

இறுதிக் கையசைப்பை பார்த்துப் பிரிந்த பொழுதுகளை எப்படி மறக்க

பச்சைக் குழந்தைகள் உயிருடன் புதையுண்டதை எப்படி மறக்க

ஆடையின்றி அம்மணம் தரித்ததை எப்படி மறக்க

ஆசைகள் அடக்கி பாசத்தை தொலைத்து பாசறை நின்றதை எப்படி மறக்க

தூக்கத்தை எறிந்து ஏக்கத்தை அணிந்து உச்ச தாக்கத்தை தொட்டதை எப்படி மறக்க

இராணுவன் அழைக்கிறான் தாய் விழுப்புண்ணடைகிறார் தாயின் உடலை விட்டு வரவேண்டுமென கட்டளை இடுகின்றான் தாயின் பிணத்தை அதிலயே விட முடியாது புதைக்கிறான் அன்பு மகன்

 புதைக்கும் தருணத்தில் உடல் சுடுகிறது
அதனால்
இன்றுவரை அவன் ஆன்மாஅம்மாவை நினைத்து குற்றவுணர்வில் துடியாய் துடிக்கிறது இறுதியில் அம்மாவை உயிருடனா நான் புதைத்தேனென!

இப்படி ஆயிரம் ஆயிரம் அழுகைகள் அவலங்கள் நிறைந்த பிணங்களின் தெருவில்
அழுகையின் பொழுதில்
கதைக்க பேச சிரிக்க என்ன அருகதை நமக்கு

நாமும் மகா நடிகர்களே

ஒரு இலட்சம் மக்கள் சாவின் அழுகையைத் தடுக்க சரித்திரம் மறைக்க புர்கா அணிதலும் மக்கா மதீனா கதைகளும் நடைபெறும் மேடையில் தாளமிடுவதால்

எது எப்படியோ எம்மை விட்டுப் பிரிந்த எம்மவரை எப்படி மறக்க?

 முள்ளிவாய்க்கால் முகமே
 நீ என் கதை சொல்வாய்

உன் கதை சொல்லு
 உலகம் தன்கதை முந்துதே

நீ என் கதை சொல்வாய்!!
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #ColomboPowered by Blogger.