பரிஸ் நகரை மேலும் அழகாக்கும் மாபெரும் பூங்கா.!

பிரான்சில் 2024 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. இதனால் நகரை மேலும் அழகாக்கும் பல திட்டங்களை முதல்வர் ஆன் இதால்கோ செய்து வருகிறார்.அதன் ஒருகட்டமாக ஈபிள் கோபுரத்தைச் சுற்றி மாபெரும் பூங்கா ஒன்றை அமைக்கப்போகிறார்கள். தற்போது கோபுரத்தின் அருகே Champs de Mars எனும் பூங்கா இருப்பினும் மறுபக்கத்தில் குறுக்கும் மறுக்கும் சாலைகள் இருப்பதால் ஒரே வாகன நெரிசல். கோபுரத்தின் அழகை ரசித்துக்கொண்டே வீதியைக் கடந்தோமானால் அவ்வளவுதான். விபத்தில்தான் போய் முடியும்.

இப்போதைய புதிய திட்டத்தின்படி வாகனங்களுக்கு மாற்றுப் பாதையை வழங்கிவிட்டு சைக்கிளோட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் முன்னுரிமை கொடுக்கும்விதமாக பூங்கா அமைக்கப்படவுள்ளது. மேலும் கோபுரத்தின் அருகே ‘சென்’ நதிக்கு மேலே உள்ள Pont d’léna பாலத்தின் இருகரையிலும் மரங்கள் நடப்படவுள்ளன. நியூயோர்க் நகருக்கு ‘செண்ட்ரல் பார்க்’ போல, லண்டன் நகருக்கு ‘ஹைட் பார்க்’ போல பரிசுக்கு இந்த மாபெரும் பார்க் அமையப்போகிறது.

இதனை வடிவமைத்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த 68 வயதுடைய Kathryn Gustafson எனும் கட்டிட வடிவமைப்பாளர் ஆவார். லண்டன் Hyde Park இல் உள்ள இளவரசி டயானாவின் நினைவு தடாகத்தை வடிவமைத்தவரும் இவரே.

இந்த அழகிய பூங்காவில் உலாவர நாம் 4 வருடங்கள் காத்திருக்க வேண்டும்..
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.