தமிழ் நாட்டில் பாஜக கூட்டணி ஏன் வெற்றி பெறவில்லை?

கஜா புயலில் மீனவர்கள் பாதிக்கப் பட்டபோது, மத்திய மாநில அரசுகள் செய்த உதவிகளை சரியான முறையில் பிரபலப் படுத்தவில்லை. புயலைப் பயன்படுத்தி பாதிரிகள் நடத்திய போராட்டங்களை சரியானமுறையில் கையாளவில்லை.
வைரமுத்து, கௌதமன், அமீர், ரஞ்சித், திருமா, கமல், மதிமாறன், பிரசன்னா, பியூஷ், வீரமணி, சுப வீ, போன்றோரின் விஷமப் பேச்சுக்களை, அவதூறுகளை அடக்கத் தவறியது.
சாகர்மாலா, எட்டுவழிச்சாலை, கொளச்சல் துறைமுகம் போன்ற திட்டங்களை கொண்டுவரக்கூடாது என சிலர் பிரசாரம் செய்யும் போது அத்திட்டத்தின் நன்மைகளை மக்களுக்கு புரிய வைக்கத் தவறியது.
H. ராஜா மட்டும்தான் தன்னால் இயன்றவரை மக்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்தார். அவரது கருத்துக்களை ஆதரிப்பது கூட தவறோ என்ற மனநிலையில் அதிமுக செயல்பட்டது.
இதுவே அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெறாததின்காரணம். புரிந்து கொண்டால் சரி.
கருத்துகள் இல்லை