தமிழகத்துக்குதான் இழப்பு-பிரேமலதா!!

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இதில் அதிமுக தேனி தொகுதியில் மட்டும் வெற்றிபெற்றது. மற்ற அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது அதிமுக கூட்டணி. கடந்த இரண்டு தேர்தல்களிலும் தோல்வியுற்று தேமுதிகவின் வாக்கு விகிதம் குறைந்துள்ளதால் அக்கட்சி முரசு சின்னத்தை இழக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.


இந்நிலையில் சென்னையில் நேற்று (மே 25) தேமுதிக பொருளாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்கள் கூட்டணி சார்பாக எம்.பிக்கள் இல்லையென்றாலும் நரேந்திர மோடியிடம் உரிமையுடன் கேட்டு தமிழகத்துக்கு வேண்டிய திட்டங்களை நாங்கள் கொண்டுவருவோம்” என்று கூறினார். இந்தக் கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு, “நிச்சயமாக தொடரும்” என்று தெரிவித்தார்.

மேலும், முரசு சின்னத்தை இழக்க நேரிடுமா என்ற கேள்விக்கு, “அதற்கு வாய்ப்பு இல்லை. அதே மாநில ஆட்சியும் தொடர்கிறது, மத்திய ஆட்சியும் தொடர்கிறது. எந்த மாற்றமும் இல்லை. கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு 37 தொகுதிகள் கொடுத்தார்கள். இந்தமுறை திமுகவுக்கு கொடுத்திருக்கிறார்கள். பெரிய மாற்றம் ஏதுமில்லை. இதனால் இழக்கப்போவது தமிழ்நாடும், தமிழக மக்களும்தான். அதுதான் எனது ஒரே கவலை.

கூட்டணியில் வெற்றிபெற்றிருந்தால் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கலாம். பல திட்டங்களால் பலவிதமாக தமிழ்நாட்டை முன்னேற்றியிருக்கலாம். அதற்கு மக்கள் வாய்ப்பளிக்கவில்லை என்பதுதான் எனது வேதனை. இந்தியா முழுவதும் மோடி அலை வீசினாலும் தமிழகத்தில் அவ்வாறு இல்லாதது ஏன் என்பது எனக்கு தெரியவில்லை” என்று கூறினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
.
Powered by Blogger.