பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் உயிரிழப்பு: புத்தளத்தில் பதற்றம்!!
புத்தளத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சிலாபம், முகுனுவட்டன பிரதேசத்தைச் சேர்ந்த அஜித் பிரசன்ன (வயது 31) என்பவர் உயிரிழந்துள்ளார்.
மாரவில நகரத்தில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
சோதனை நடவடிக்கையின்போது குறித்த இளைஞனுக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதிலேயே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை