புலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.!!

தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும்.
இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு தேவை. தற்போது அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களின் அந்த ஒத்துழைப்பை இல்லாமல் செய்துவிட வேண்டாம்’
இவ்வாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார்.
பயங்கரவாதத்துக்கு அடிபணியாமல் நாட்டு மக்களின் வாழ்க்கையை சாதாரண நிலைக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டிருக்கின்றார்.
கொழும்பில் 01,05,2019 இடம்பெற்ற மே தின நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
எதிர்வரும் வெள்ளிக்கிழமை முஸ்லிம் பள்ளிவாயல்களில் வழிபாடுகள் இடம்பெற வேண்டும். அதேபோன்று ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ ஆலயங்களில் வழிபாடுகள் இடம்பெற வேண்டும்.
நாம் உள்நாட்டுப் பயங்கரவாதத்துக்குப் முகம்கொடுத்ததைப் போல தற்போது வெளிநாட்டு ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதத்துக்கு முகம்கொடுத்திருக்கின்றோம். நாம் சர்வதேச புலனாய்வுத் துறையினரையும் இணைத்துக் கொண்டே பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளோம்.
நாம் புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்தமைக்கு பிரதான காரணம், முஸ்லிம்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும்.
இதனை இல்லாமல் செய்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றேன் எனவும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.

1 comment:

  1. பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதனை அடியோடு அழித்தொழிக்க வேண்டியது நாட்டுப்பற்றுள்ள அனைவரினதும் தலையாய கடமையாகும். இதனை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். புலிப் பயங்கரவாதத்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட நன்மைகள் என்ன? எத்தனை இலட்சம் தமிழ் மக்கள் இதனால் உயிர் இழந்தார்கள். நிம்மதி சொத்து சுகம் குடும்பங்களை இழந்து பாதிக்கப்பட்டார்கள். எத்தனை முஸ்லிம்கள் எந்தவிதமான ஈவிரக்கமும் இன்றி வகைதொகையாகப் பாதிக்கப்பட்டார்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். ஹஐ;ஐ_க்கு போனவர்கள் திரும்பி வந்தவர்கள் பள்ளிவாசல்களுக்கு தொழச் சென்ற சிறு குழந்தைகள் கூட தாங்கள் ஏன் சாகிறோம் என்ற காரணம் தெரியாமலேயே அழிக்கப்பட்டனர். முஸ்லிம்களை நோக்கிய புலிப் பயங்கரவாதத்தின் கோர முகங்களை இங்கெல்லாம் எழுதி முடிக்க முடியாது. இதுபற்றி எந்தத் தமிழ்த் தலைமைகளாவது எப்போதாவது எந்தச் சந்தர்ப்பத்திலாவது வாய் திறந்து பேசினார்களா. அல்லது சாட்டுக்காவது வருத்தம் தெரிவித்தார்களா? புலிகள் அழிக்கப்படுவதற்கு முஸ்லிம்கள் மட்டும் காரணம் அல்ல. ஆகிலும் பெரிய காரணம் சர்வதேச சமூகம் உட்பட கருணா அம்மானும்தான். தனக்குத் தமிழ்த் தலைமைத்துவம் வேண்டும் என்பதற்காக கருணாவினால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட காலத் திட்டமே இதுவாகும். உண்மை எங்கோ இருக்க புலிகள் அழிக்கப்படுவதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்ற கூற்று சின்னப் பிள்ளைக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து அவர்களது பிரச்சினைகளை சமாளிப்பதுபோல் இருக்கின்றது. .

    ReplyDelete

Powered by Blogger.