றிஷாட் தீவிரவாதியால் ஆசியாவில் மிகப்பொிய பணக்காரன் ஆனது எப்படி..?

பை ஒன்றில் உடைகளுடன் கொழும்புக்கு வந்த அமைச்சா் றிஷாட் பதியூதீன் ஆசியாவில் மிகப்பொிய பணக்காரா் ஆனது எப்படி? இது தொடா்பில் ரசாங்கம் விசாாிக்காமல் இருப்பது ஏன்? என பொதுபலசேனா அமைப்பின் தேசிய அமைப்பாளா் நந்தன தேரா் கேள்வி எழுப்பியுள்ளாா்.


பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் ஆஜராகுவதற்காக சென்ற போது ஊடகவியலாளர்களிடம் தேசிய அமைப்பாளர் நந்தன தேரர் மேற்படி கேள்விகளை எழுப்பியுள்ளாா்.

தனது அமைச்சு பதவியை தவறாக பயன்படுத்தி பாரிய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பயங்கரவாத குழுக்களுக்கு பாதுகாப்பு வழங்கி பாரிய சொத்துக்களை பெற்றுள்ளதாக தேரர் குற்றம் சாட்டினார்.

சாதாரண பை ஒன்றில் ஆடை எடுத்து கொண்டு கொழும்பு வந்த ரிசாத் பதியூதின், மிகப் பெரிய பணக்காரனாக மாறியது எப்படி?

இது தொடர்பில் உரிய தரப்பினரிடம் முறைப்பாடு செய்த போதிலும் இதுவரை எந்தவித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என தேரர் குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo
Powered by Blogger.