அமைச்சராகும் நடிகை ரோஜா!!

 
ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றுள்ள சட்டமன்றத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் நடிகை ரோஜா அமைச்சராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.


நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்றுமுடிந்து முடிவுகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும் வெளியாகியுள்ளன.

ஏப்ரல் 11ஆம் தேதி அங்கு வாக்கு பதிவு நடைபெற்றது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழ்த் திரையுலகில் வலம் வரும் நடிகை ரோஜா ஆந்திர மாநிலத்தின் நகரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் லொள்ளுப்பா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தவிர்த்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். தற்போது அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தெலுங்குதேச வேட்பாளர் காலி பானு பிரகாஷை 2681 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 144 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கட்சி 30 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. எனவே தனிப்பெரும்பான்மையோடு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைக்கவுள்ள நிலையில் ரோஜாவுக்கு அமைச்சராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

மே 30ஆம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி அமைக்கவுள்ள நிலையில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.