மக்களின் நம்பிக்கையை காப்போம்-ஸ்டாலின்!!

இந்திய அளவில் பாஜக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தாலும், தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி சோபிக்கவில்லை. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் போட்டியிடும் தேனி தொகுதியைத் தவிர மீதமுள்ள அனைத்துத் தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்துவருகிறது. 22 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் 13 இடங்களில் திமுக முன்னிலை வகித்துவருகிறது.இதுதொடர்பாக தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தலை வணக்கம் தமிழகமே. நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மக்கள் எங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்! தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பாஜக பெற்றுள்ள வெற்றியை அடுத்து பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “ஜனநாயகம், அனைவரையும் உள்ளடக்கும் பண்பு ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் முற்போக்கான அரசைத் தருவார் என நம்புகிறேன். தர வேண்டுமென விரும்புகிறேன்” என்று கூறினார்.

திமுகவின் வெற்றியைத் தொடர்ந்து இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்துக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.