"நான் எதைச் சாப்பிட வேண்டுமென்பது எனது விருப்பம்!" - மதுரையில் சீமான்!!

மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பின்னர் மதுரை வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ``எங்களைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலில் எங்களுக்கு வெற்றிதான் கிடைத்துள்ளது. சாதாரண குடிமக்களாக உண்மையான அரசியல் மூலம் புரட்சிகரமான அரசியலை செய்துவருகிறோம்.

இத்தேர்தலில், தேர்தல் ஆணையம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. 150 வாக்குப் பெட்டிகளை எடுத்துவருகிறார்கள். ஆட்டோவில் வாக்குப் பெட்டியைக் கொண்டு வருகிறார்கள். சிறுவன் வாக்குபெட்டியைத் தூக்கிக்கொண்டு செல்வதையும், நட்சத்திர விடுதிகளில் வாக்கு எந்திரங்கள் உள்ளதையும் வலைதள காணொலிகளில் பார்த்தோம். இது எந்த மாதிரியான அணுகுமுறை. எல்லா இடங்களிலும் காசு கொடுக்கப்படுகிறது. ஆனால், எதையும் தடுக்கவில்லை தேர்தல் ஆணையம். நாங்கள் நேர்மையாக இருப்பது என்ன பலன்?


பா.ஜ.க இங்கு வெற்றி பெறவில்லை என்பதால் எதையும் தமிழகத்துக்குச் செய்யமாட்டார்கள் என்று சொல்வது மக்களை அச்சுறுத்துவதற்காக உள்ளது. ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்கும்போது ஆந்திராவின் வளர்ச்சிக்கு உதவுகிறேன் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் உள்ளது. இந்தியாவிலேயே அதிக வருமானம் தரக்கூடிய மாநிலத்தில் நாம் இரண்டாவதில் இருக்கிறோம். ஆனால், எவ்வளவு திருப்பிக் கொடுக்கிறார்கள்.


மாட்டுக்கறியை வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள். ஆனால், இங்கு இருப்பவர்கள் சாப்பிட்டால் அடித்துக்கொல்கிறார்கள். முதலில் எங்கள் உணவை உறுதி செய்யுங்கள். பிறகு எதை சாப்பிட வேண்டும் எனக் கூறுங்கள். நான் எந்தக் கறியையும் சாப்பிடுவேன். மாட்டுக் கறி பன்றிக் கறி பாம்புக்கறி எலிக்கறி தின்பேன் அது என்னுடைய விருப்பம். மாட்டுக்கறியை திங்கக் கூடாது என அடிக்கிற நீங்கள், தஞ்சையில் தண்ணீர் வராமல் இருக்கும்போது பல்லி, பூரான், எலிகளைச் சாப்பிடும் நிலை வந்தபோது எங்கு சென்றீர்கள். இது ஒரு கொடும் போக்கு" எனக் கடுமையாக விமர்சித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.