இலங்கை இசைக் குழுக்கள் ஒன்றியத்தினர் ஜனாதிபதியை சந்தித்தனர்!! 📷

இலங்கை இசைக்குழுக்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள்  (24) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களைச் சந்தித்தனர்.


நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதுகாப்பு நிமித்தம் இசைக் கச்சேரிகளை நடாத்த முடியாதுள்ளமையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் தமது துறை சார்ந்த வேறு பிரச்சினைகளை இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் இசைக் கலைஞர்கள் முன்வைத்தனர்.

இவ்வனைத்து பிரச்சினைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், அவர்களது எதிர்கால செயற்பாடுகளுக்கு அரசாங்கம் என்ற வகையில் பெற்றுக்கொடுக்கக் கூடிய அனைத்து ஒத்துழைப்புக்களையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அவர்களும் இச்சந்திப்பில் பங்குபற்றினார்.

Powered by Blogger.