தமிழ் அரசியல் கைதிகளின் பகிரங்க மடல் கூத்தமைப்பு சம்பந்தனுக்கு!!

சாக்கு போக்கு சொல்லாமல் அரசியல் கைதிகளை விடுவிக்க மைத்திரிக்கு சம்மந்தன் அதிரடி என்ற தலைப்பில் அண்மையில் பத்திரிகைகளில் செய்தி வெளிவந்திருந்தது. இது தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியதன் பொறுப்பு எமக்கு உள்ளது என தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

 இது தொடர்பாக அவர்கள் தெரிவித்ததாவது.

சம்பந்தன் ஜயா ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் அரசியல் கைதிகள் என்பவர்கள் தமிழர் விடுதலைக்கு தங்களது வாழ்வை தந்தவர்கள் மற்றவர்கள் அப்பாவிகள் சந்தேகத்தகன் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்கள் இன்று அரசியல் கைதிகளின் குடும்பங்கள் பல்வேறு நெருக்கடிகளில் வாழந்து கொண்டிருக்கிறார்கள். தந்தை முகம் தெரியாத குழந்தை, பொருளாதார நெருக்கடி, சமூகத்தில் இருந்து புறக்கணிப்பு என பல இன்னல்களை அரசியல் கைதிகளின் குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் பொறுப்புள்ள பதவியில் உள்ள நீங்கள் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எந்தவிதமான  ஆக்கபூர்வமான நடவடிக்கையும் தாங்களும் தங்களது கட்சியும் எடுக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. தமிழ் தேசிய கூட்டமைப்பு நல்லாட்சி அரசுக்கு ஆதரவு வழங்கும் பொழுது அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எந்தவிதமான நிபந்தனைகளையும் விதிக்காமல் அரசுக்கு ஆதரவு வழங்கியமையை அரசியல் கைதிகளின் இந்த சிக்கலான நிலைக்கு காரணம்

இனிவரும் காலங்களில் மக்களை ஏமாற்றும் வேலைகளை செய்யாது தமிழ்  அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவேடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து பிச்சைக்காரன் புண்ணை மாற்றாமல் இருப்பது பிச்சை எடுப்பதற்கு என்பது போல இக் கைதிகளின் துன்பத்தை வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்வது பிச்சை கார அரசியல் ஆகும் இது நீங்கள் ஒட்டு மொத்த தமிழ் சமுகத்திற்கு செய்யும் துரோகம் ஆகும்

2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவடைந்த பின் மேய்பவன் அற்ற தமிழினத்தை காக்க வந்த ரட்சகர் போல மக்கள் முன் தோன்றினீர்கள் இன்று 10 வருடங்கள் கழிந்த நிலையில் நீங்கள் சாதித்தது என்ன தமிழ் இனத்திற்கு பெற்றுக் கொடுத்தது என்ன?இந்த வருடத்தில் தீர்வு நாளை தீர்வு என போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தை ஏமாற்றியதை தவிர வேறு ஒன்றும் இல்லை

அண்மையில் கன்னியா வென்னீர் ஊற்று பிரச்சினை என்பது ஒட்டு மொத்த தமிழர்களின் பிரச்சினை இந்த விடயத்தில் ஒரு பெண் தனியாக நின்று நீதி கேட்டுப்போரடியபொழுது தங்கள் மௌனமாக கொழும்பில் இருந்ததற்கான காரணம் என்ன தொகுதியில் இருக்க வேண்டிய தங்களை திருகோணமலை மக்கள் உங்களை கொழும்பில் சந்திக்க வேண்டிய நிலையில் உங்களுக்கு வாக்களித்த மக்கள் இருக்கிறார்கள்.

இனிவருங்காலங்களில் நீங்கள் உங்கள் பொறுப்புகளையும் கடமைகளையும் உணர்ந்து நடக்கவில்லை என்றால் இனி வருங்காலத்தில் தமிழ் சமுகத்தை தந்தை செல்வா கூறியது போல் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.