சிறிலங்கா இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ் தாக்குதல்!!📷

ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் 3  என்கின்ற பெயரில்  3 ஆம்  தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களுக்குள்  ஊடுருவிய  தமிழீழ இணைய இராணுவத்தினர் (Tamileelam Cyber Force) சைபர் தாக்குதல் தொடுத்துள்ளனர்.

மே 18 தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால்  3 என்கின்ற பெயரில் சிறிலங்காவின் பிரதமர் ரணிலின்  இணையத்தளம் , தூதூவராலயங்களில் இணையத்தளங்கள், சிறிலங்கா அரசநிர்வாக இணையங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300 -க்கும் மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களை ஊடுருவி அந்த தளங்களில் முள்ளிவாய்க்கால் இன்படுகொலைப்படங்களை பதிவேற்றியும் அதை தாம் மறக்க மாட்டோம் எனவும் செய்தியும்    “விழ விழ எழுவோம்… விழ விழ எழுவோம்… ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்!” என்ற பாடலும்    பதிவேற்றியுள்ளனர்.

2018  ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில்  இணையத்தளங்களினூடாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் இருந்து சிறிலங்காவை பாதுகாப்பதற்காக, புதிய படையணி ஒன்றை உருவாக்கி உள்ளதாக சிங்கள இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கூறிய நிலையில்,  இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இதே மாதிரியாக 2017 -2018  ஆம் ஆண்டுகளில்  மே மாதம்18ம் திகதியும் 300க்கும் மேற்பட்ட இணையத்தளங்களும் 2018  நவம்பர் மாதம் ஒட்டுக்குழு கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் டுவிட்டர் பக்கத்தையும்       இதே பேரில் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
கீழ் வரும் இணைப்பில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட இணையங்களின்  தொகுப்பு.
மேலும் இணையங்களுக்கு கீழ் வரும் இணைப்பில் சென்று பார்வையிடலாம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo







கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.