டேனியல்களுக்கும், மைக்கேல்களுக்கும் கேள்விகேட்கும் உரிமையில்லையா?'-திருமுருகன் காந்தி!!

இதனால் விவாத மேடையிலேயே இரு தரப்புக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பி.ஜே.பி-யினர் பலரும் சமூகவலைதளங்களில் அதே பெயரையை பரப்பி வருவதாக மே பதினேழு இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது .
இது குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் லேனா குமாரிடம் பேசியபோது,
``விவாத மேடையிலேயே கரு.நாகராஜன் இவ்வாறு டேனியல் காந்தி என்று அழைத்ததை எதிர்த்து திருமுருகன் காந்தி பேசியுள்ளார். அதற்கு ஆதாரம் உள்ளதா என்று கேள்வி எழுப்பியதும் அதற்கு கரு. நாகராஜன் 'தலைவர்கள் பேசும்போது அப்படியே கேட்டு கேட்டு இந்த மேடையிலும் ஒலித்துவிட்டது என்று சமாளித்து மன்னிப்புக் கேட்டுள்ளார்.
செய்துள்ளது. திருமுருகன் பெயர் பள்ளிச் சான்றிதழ் முதல் அனைத்து ஆவணங்களிலும் அவரது இயற்பெயரான திருமுருகன் என்றும் அவரது அப்பா பெயரான காந்தியும் இருக்கும்போது எந்தவித ஆதாரமுமின்றி தொடர்ச்சியாக இந்த அவதூற்றை தோழரின் மீது பி.ஜே.பி-யினர் பரப்பி வருகின்றனர். இது மிகவும் கண்டனத்துக்குரியது.
கருத்துகள் இல்லை