மீண்டும் மூழ்கிய டைட்டானிக்!

மார்வெல் ஸ்டூடியோஸின் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் டைட்டானிக் படத்தின் 22 ஆண்டு கால வசூல் சாதனையை முறியடித்துள்ளது. இதனைக் குறிப்பிட்டு அவெஞ்சர்ஸ் எனது டைட்டானிக்கை மூழ்கடித்தது என அதன் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பதிவிட்டுள்ளார்.

சென்ற மாதம் வெளியாகி உலகமெங்கும் வசூல் சாதனை புரிந்து வரும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம், அவெஞ்சர்ஸ் படத்தின் நான்காவது மற்றும் கடைசி பாகமாகும். ரசிகர்கள் விமர்சகர்கள் என அனைத்து தரப்பினரையும் மகிழ்வித்த இத்திரைப்படம் வெளியான அனைத்து நாடுகளிலும் அதன் பிராந்திய மொழி படங்களுக்கு இணையாக ஓடி வசூல் சாதனை புரிந்து வருகிறது.


இதற்கு முன் வசூல் சாதனையில் உலகின் முதல் மூன்று திரைப்படங்களாக வரிசையில் இருந்தவை அவதார், டைட்டானிக், ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ் போன்றவை. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம், ஸ்டார் வார்ஸ் மற்றும் டைட்டானிக் படங்களை முந்தி தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது.
முதல் மற்றும் மூன்றாம் இடத்தில் இருக்கும் படங்களை(அவதார், டைட்டானிக்) இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் இன்று தனது ட்விட்டர் வலைதளத்தில் மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை குறிப்பிட்டு: “ஒரு பனிப்பாறை நிஜ டைட்டானிக்கை மூழ்கடித்தது. அவென்ஜர்ஸ் எனது டைட்டானிக்கை மூழ்கடித்தது. லைட்ஸ்டார்ம் என்டர்டெயின்மென்ட்டில்(டைட்டானிக் தயாரிப்பு நிறுவனம்) இருக்கும் அனைவரும் உங்களது வியத்தகு சாதனையை வணங்குகிறோம்.

இந்த சினிமா உலகம் உயிர்ப்போடு மட்டுமல்ல, நலமாகவும் உள்ளது என்று நீங்கள் காட்டியுள்ளீர்கள், இது எப்போதையும் விட பெரியது” என பதிவிட்டுள்ளார்.

தனது படத்தின் வசூல் சாதனையை முறியடித்த மற்றொரு படக்குழுவிற்கு பரந்த மனதுடன் தனது வாழ்த்துக்களைக் கூறிய ஜேம்ஸ் கேமரூனின் பண்பட்ட குணம் அனைவரையும் ஈர்த்துள்ளது.

இவரது அவதார் திரைப்படத்தின் வசூலை அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முறியடிக்க வாய்ப்புள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.