பாலாஜி சக்திவேலின் அடுத்த படம்!

காதல், வழக்கு எண் 18/9 போன்ற படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேலின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் பாலாஜி சக்திவேல் தனது யதார்த்தமான திரைபடங்களினால் தனக்கென ஓர் திரைமொழியினை தமிழ் சினிமாவில் உருவாக்கியவர்.


விக்ரம் நடிப்பில் உருவான சாமுராய் படத்துக்குப் பின், இவரது இரண்டாவது படமான பரத், சந்தியா நடித்த காதல் என்ற படத்தின் மூலம் தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்தினார். அடுத்தடுத்து இவர் இயக்கிய கல்லூரி, வழக்கு எண் 18/9 போன்ற படங்கள் மாற்று சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வழக்கு எண் 18/9 திரைப்படம் 2012ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது.

அதற்குப் பின் இவர் தொடங்கிய ரா ரா ராஜசேகர், யார் இவர்கள் என்ற இரண்டு திரைப்படங்களும் புரொடக்‌ஷன் நிலையிலேயே கால தாமதமானது. இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவலில் சாந்தினி தமிழரசன் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கி வருகிறார். கடந்த இரண்டு மாதங்களாக பெயரிடப்படாத இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் படம் பற்றிய செய்திகள் இனிவரும் நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சித்து +2 படத்தின் மூலம் அறிமுகமான சாந்தினி தமிழரசன் வில் அம்பு, ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி போன்ற படங்களில் நடித்தவர்.
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி நடித்துவரும் அசுரன் படத்தில் பாலாஜி சக்திவேல் வில்லனாக நடித்துவருகிறார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.