இலங்கையர்கள் இனி விசா இன்றி அமெரிக்கா செல்லலாமாம்!


அமெரிக்காவின் விசா தள்ளுபடி திட்டத்தில் புதிதாக இலங்கை உள்ளிட்ட 10 நாடுகள் இணைக்கப்படவுள்ளன. இலங்கையில் அமெரிக்க இராணுவத்தளம் ஒன்றை அமைக்க அரசாங்கம் அனுமதியளித்தன் விளைவாக, இலங்கைக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏபி இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அர்ஜென்டினா, உருகுவே, இலங்கை, தென்னாபிரிக்கா, கென்யா, ஜமைக்கா, ஹாங்காங், சீசெல்ஸ், மலாவி மற்றும் ஜோர்ஜியா ஆகியவை பத்து நாடுகளாகும். ஆர்ஜென்டினா, உருகுவே ஆகிய இந்த திட்டத்திலிருந்து 2002, 2003 இல் நீக்கப்பட்டிருந்தன. இப்போது மீள இணைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், இந்த நாடுகளின் பிரஜைகள் சுற்றுலா மற்றும் வணிக நோக்கங்களிற்காக விசா இன்றி அமெரிக்காவில் 180 நாட்கள் தங்கியிருக்கலாம். அமெரிக்காவிற்கு புறப்படுவதற்கு முன்னர், குறைந்தபட்சம் 72 மணிநேரம் (3 நாட்கள்) முன்னதாகவே, பயண அங்கீகாரத்திற்கான மின்னணு அமைப்பு (ESTA) மூலம் பயண அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். எனினும், சிரியா, ஈராக், ஈரான், சூடான், லிபியா, சோமாலியா மற்றும் யேமன் ஆகிய நாடுகளின் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் எனில், அவர்கள் முறைப்படி விசா பெற வேண்டும்.

No comments

Powered by Blogger.