கேணல் வசந்தன் மாஸ்ரர் என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளி !!

“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில் இருந்தவர்களின் முகத்தில் ஏதோ ஒரு வித மாற்றம் வரும். அவர் போராளிகளுக்குக் கொடுக்கின்ற பயிற்சி அவ்வளவு கடினம் மட்டுமல்லாது பயிற்சியை முறையாகச் செய்யாதவர்களுக்கு அடிப்பதும் காரணமாக இருந்தது.


அவரிடம் பயிர்ச்சி பெற்றவர்களுக்கு அவர் மீது எவ்வளவு கோவம் இருந்ததோ அதை விட மேலாக பாசமும் இருந்தது.



“கடும் பயிற்சி; இலகுவான சண்டை” என்ற அண்ணையின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தவர் எங்கள் வசந்தன் மாஸ்ரர். 1993 காலப்பகுதியில் எனக்கு மாஸ்ரருடன்
பழகும் சந்தர்ப்பம் அதிகம் கிடைக்கவில்லை, 1995 க்கு முன்பு நான் மாஸ்டரை எப்போதாவது ஒரு முறை எமக்குப் பயிற்சி அளிப்பதற்கு வரும்போது மட்டும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். 1995 எமக்கான பயிற்ச்சி திடடத்திற்கு வசந்தன் மாஸ்ரர் அவர்களிடமே முழுமையான பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது, எமது பயிற்சி திடடத்திற்காக மாஸ்டர் எம்முடைய முகாமிலேயே தங்கி இருந்தார். அங்கு அவர் தனக்கென ஒரு கொட்ட்டில் அமைத்து அதில் தனது பயிற்சிக்கான உபகரணங்களையும் (குத்துச் சண்டை, பளு தூக்கல் போன்றவற்றிற்கான) ஒழுங்கு செய்திருந்தார். மாஸ்ரர் எப்பொழுதும் தனக்கான பாதுகாப்பை அவரே உறுதி செய்து விட்டு தான்நித்திரைக்கு செல்வது வழமை. மாஸ்டர் எமது முகாமில் தங்கி எமக்கு பயிற்சி அளித்ததால் அவரை நாம் நன்றாகவிளங்கிக்கொள்ள முடிந்தது , இரவு எத்தனை மணிக்கு பயிற்சி முடிந்தாலும் அல்லது வெளியில் பணி நிமித்தம் சென்று வந்தாலும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்ய என்றுமே தவறியதில்லை.

பயிற்சி ஆரம்பிக்க முன்பு தனக்கான பயிற்சிகளை முடித்து விட்டு வந்து எம்முடனும் பயிற்சி செய்வார் ; நாம் செய்யும் அத்தனை பயிற்சிகளையும் தானும் இணைந்து செய்வார் , கராத்தே, சிலம்பு, மழு, வாள், மல்யுத்தம், குத்துச்சண்டை போன்ற பயிற்சிகள் முழுமையாக பயிற்றுவித்ததோடு குங்க்பூ, வர்மம் போன்ற கலைகளையும் பயிற்றுவித்தார். கோபம் அவரது இயல்பு அல்ல. தலைவரின் சிந்தனைக்கு சரியாக செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்பதே அவருடைய சிந்தனையாக எப்போதும் இருந்தது.

இதை அவர் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பர். அதற்குப் பயிற்சி எடுக்கும் போராளிகள் ஒத்துழைக்காத போது வருவது தான் அவரது கோபம். பயிற்சி முடிந்த ஓய்வு வேளைகளில் அவர் எம்முடன் பழகும் அந்தத் தருணங்கள் அதை எமக்குத் தெளிவாக உணர்த்தும். பயிற்சிஅளித்துக்கொண்டிருக்கும் போது அவரது உடம்பில் இருக்கும் காயங்களில் இருந்து உள்ளிருக்கும் குண்டு சிதறல்கள் சில சமயங்களில் வெளிவரும்.

அதை எடுத்து எறிந்துவிட்டு பயிற்சி தருவார். அந்த வேளையில் அவருடைய அர்ப்பணிப்பு எம்மை வியக்க வைக்கும். எம்மிடம் உள்ள பயத்தினை இல்லாதொழிக்க, சூட்டுப்பயிற்சி நேரங்களில் நாம் இலக்குகளைக் குறிபார்த்து சுடுகின்ற போது எம்மை நம்பி எமது சூட்டிலக்கிற்கு (target) அருகில் நின்று பார்ப்பார், நாம் மாஸ்ரர் நிற்கிறார் என்பதற்காக இன்னும் கவனமாக குறிபார்த்து சுடுவோம்.

எமக்கான ஒரு தந்தையாக, தாயாக, அண்ணனாக, ஆசானாக, எம்மில் ஒருவராக கலந்திருந்தது பயிற்சி அளிக்கும் தருணத்தில் சம்பவம் ஒன்று மனதை வருட்டியது , ஒருநாள் இளந்தென்றல் என்னும் போராளிக்கு (வீரச்சாவெய்திவிடடார்) வட்டவாரியின் பென்சிலை வைத்து அழுத்திப்பிடிக்க இருக்கும் வளையம் ஒன்று தொலைந்து விட்ட்து அதற்கு ஒரு கம்பு நார் ஆகிரளவு அடித்துவிடடார் ,அந்த நேரம் எனது சமையல் நாள், 11 .௦௦ மணிக்கு தேநீர் (பால்) எடுப்பதற்காக சமையல்கூடம் சென்றுவிடடேன் , நான் தேநீருடன் வரும் போது அனைவர் முகத்திலும் ஒரு கலக்கம், அடிவிழுந்தது இளசுக்குத்தான் ஆனால் அவனுடைய நண்பர்களும் அழுதுகொண்டிருந்தார்கள், நான் அவர்களிடம் கேட்டபோது தான் சம்பவம் புரிந்தது , அன்று ஒரு சின்ன வடடவாரியின் பாகம் தொலைத்தத்துக்காக இந்த அடியா என்று எண்ண தோன்றும் , ஆனால் அன்று அந்த வடடவாரியின் பாகம் தொலைக்கும் போது நாம் என்ன பணிக்காக பயிற்சி பெற்றிருந்தோம் என்பதை அறிந்தவர்களால் அதனுடைய தாக்கம் நிச்சயமாகப் புரிந்திருக்கும்.

அன்று எமக்கான பணி முக்கியமானது. சிறு தவறுக்கும் நாம் இடமளிக்க கூடாது என்பது தான் அன்றைய எமது நிலை , முதலில் நாமும் கோவப்படடோம், எமது அணிக்கான பொறுப்பாளரும் அந்த சூழலை அன்று ஏற்க மறுத்துத்தான் இருந்தார், பின்பு எங்களில் சற்று முதிந்தவர்கள் அவரை சமாதானம் செய்த போது நிலைமையை புரிந்து கொண்டார்கள் , எமது பயணம் தாமதிக்காமல் பயணிக்க விரும்பினோம், மாஸ்ரரும் இளசுக்கு அன்று நடந்த சம்பவத்தை நினைத்து மனம் வருந்தினார்.

அதை பலமுறை எம்முடன் உரையாடும் போது வேதனையோடு சொல்லுவார் , கண்டிப்பாக மாஸ்ரரை பற்றி சொல்லும் போது இதையும் குறிப்பிட விரும்புகிறேன், வசந்தன் மாஸ்ரருக்கு பயணத் தேவைகளுக்காக ஒரு MD 90 உந்துருளி கொடுக்கப்பட்டிருந்தது, அவர் பயிற்சி கொடுப்பதற்கு செல்லும்போது அவரது பாவனைக்காக ஒரு மாதத்திற்கு 5 லீட்டர் பெட்ரோல் மட்டுமே வழங்கப்படும்.

அதை ஒரு லிட்டருக்கு நாலு லீற்றர் மண்ணெண்ணெய் கலந்து 40 கிலோ மீற்றர் அளவு வேகத்துக்கு எண்ணையின் பாவனை அளவைக் குறைத்துப் பாவித்து மேலதிக வேலைகளைச் செய்துகொண்டிருந்தார் , தன்னைப்போல தற்காப்புக்கலைகளிலும் சிறப்புப் பயிற்சிகளிலும் போராளிகளைச் சிறப்பாக வளர்க்க வேண்டும் என்பது அவரது எண்ணம். அதை தன்னால் முடிந்தளவு செய்தும் இருக்கிறார்.

பயிற்சிகளில் நாம் விடும் தவறுக்கு பலமுறை அடிவாங்கியிருக்கின்றோம் அந்த அடித்தான் கடினமான பயிற்சிகளையும் இலகுவாகப் பெற்று சிறப்பாக முடிக்க முடிந்தது என்பதை இன்று நான் உணர்கின்றேன், நாம் பெற்ற பயிற்சிகள் போல அனைத்துப் பயிற்ச்சிகளையும் எல்லா போராளிகளும் பயின்றிருக்க வேண்டும் என்று எம்மில் ஐந்து பேர் பயிற்சியாசிரியர்களாக நியமிக்கப்படடோம்,34 பேர் கொண்ட அணியாக பயணித்த எங்களுக்கு இடையிடையே பணிக்காக நாம் பிரிந்து செல்லும் நிலையும் வந்தது.

34 பேர் கொண்ட அணியில் தேசியத்தலைவரின் பாதுகாப்பிற்காக 17 பேர் எம்மிலிருந்து சென்றுவிடடார்கள் அப்போது நாம் கராத்தேயில் மண்ணிறப்பட்டி நிறைவுடன் இருந்த காலம் , அவர்களின் பிரிவு சிறிது வேதனையாக இருந்தாலும் தலைவரின் பாதுகாப்புக்கென்பதால் ஆறுதல் அடைந்தோம்; பெருமையடைந்தோம்.

அந்த சமயங்களில் ஒருநாள் நாம் பயிற்சி கொடுப்பதற்காக சென்று கொண்டிருந்த போது எனது அம்மா என்னை கண்டுகொண்டார், நானும் கண்டுவிடடேன் ஆனால் மாஸ்ரரிடம் நான் சொல்லவில்லை.

அப்படியே சென்று விட்டேன், பயிற்சி முடித்து திரும்பி வரும்போதும் அம்மா அதிலேயே நின்று அழுதுகொண்டிருந்தா, மாஸ்ரர் கிட்ட சென்று, அம்மா ஏன் அழுகிறீர்கள்? நான் போகும்போதும் உங்களை பார்த்தேன் அழுது கொண்டிருந்தீர்கள் என வினவினார், அம்மா அழுகை பலமானபோது என்னை கேட்ட்டார், உனக்கு தெரியுமா? நீயும் போகும் போது வடிவாக பார்த்துக்கொண்டுதான் வந்தாய் என்று. நான் அப்போது தான் சொன்னேன் அது எனது அம்மா என்று. நான் அம்மாவை பார்த்து ஆறு வருடங்கள் கடந்திருந்தது , எமக்கு விடுமுறையில் செல்வதற்கான அனுமதி அப்போது தடைசெய்யப்பட்டிருந்தது ,

அப்போது அம்மாவிடம் அவர் இருக்கும் இடம் பற்றிய விபரத்தை கேட்டு விட்டு வந்துகொண்டிருந்த போது என்னுடன் அது சார்ந்த எந்த கதையும் கதைக்காமல் வழமை போல பயிற்சியளிப்பது சார்ந்த கதைகளை சொல்லிக்கொண்டு வந்தார். நான் எனக்குள் நினைத்துக்கொண்டிருந்தேன், மாஸ்டர் பயணிக்கும் போது என்றாலும் சரி தூங்கும் போது என்றாலும் சரி மிகக் கவனமா இருப்பார். பின்பு ஒருநாள் அனுமதி பெற்று அம்மாவை பாக்கிறசந்தர்ப்பத்தை உருவாக்கி என்னுடன் தானும் வந்தார் ,

அதன் பின் அம்மாவை நான் பார்க்கவில்லை அம்மா காலமாகிவிட்டார், அன்று மாஸ்ரரின் உதவியால் என் அம்மாவை ஒருமுறையேனும் பாக்கிற சந்தர்ப்பம் கிடைத்தது, எனது அன்னையின் முகத்தை ஒருமுறையேனும் பாக்கிற சந்தர்ப்பத்தை ஏற்படுத்திய நன்றிநன்றிமாஸ்ரரை இந்தத் தருணத்தில் நன்றியுடன் நினைவுபடுத்திக் கொள்கின்றேன். வசந்தன் மாஸ்டர் தூங்கும் போது எப்போதும் அவரது கைத்துப்பாக்கி அவரது தலையணைக்கு அடியில் வைத்துதான் தூங்குவார் , அவர் தூக்கத்திலிருந்து எழும்ப முன்பாக யாரேனும் அவரை எழுப்பவேண்டும் என்றால் சற்று தள்ளி நின்று மாஸ்ரர் என்றால் போதும் கைத்துப்பாக்கியுடன் வந்து கதைத்துச்செல்வார், தெரியாதவர்கள் அருகில் சென்று அவரை தொட்டு எழுப்பினால் கைத்துப்பாக்கிகைத்துப்பாக்கிகைத்துப்பாக்கியைச் சுடும் அருகிருப்பவர்கள் அருகிருப்பவர்கள்நிலைக்கு கொண்டு வந்தபடியே தான் எழும்புவார்.

அங்கிருப்பவர்கள் பயந்திடுவார்கள். இது பலமுறை நடந்தும் இருக்கிறது,,., அவரது கைத்துப்பாக்கிதான் மாஸ்ரரின்மாஸ்ரரின்அவருடைய வீரச்சாவுக்கும் காரணமானது, அவரது கைத்துப்பாக்கியை இராணுவ எறிகணைத் தாக்குதலில் இருந்து மீட்கச் சென்ற போது அந்த எறிகணைத் தாக்குதலிலேயே அவரும் கொண்டாடக்கூடியகொண்டாடக்கூடியவீரச்சாவடைந்தார்.

எங்களை வளர்த்த எங்களின் ஆசானின் வித்துடலைக் கூடக் காணக்கூடிய இடத்தில் அன்று நான் இருக்கவில்லை.

என் மனதுக்குள் உறுதி எடுத்துக்கொண்டேன், 1998 ஒன்பதாம் மாதம் கறுத்தப்பட்டி வழங்கும் வைபவம் , தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் கையால் அதை நாம் பெற்றுக் கொண்டோம். தலைவரின் வருகையை மங்கள வாத்தியமான தவில் வாத்தியதுடன் வரவேற்கவேண்டும் என்று மாஸ்ரர் விரும்பினார் , எம்மில் பலர் கலைகளிலும் சிறந்தவர்களாக இருந்தவர்கள்.

தேசியத்தலைவரின் சிந்தனையில் உருவான தமிழீழ படைத்துறைப்பள்ளியில் எல்லா கலைகளும் பயில்வதற்கான சந்தர்பத்தையும் நாம் பெற்றுக் கொண்டோம். நானும் ரவியும் (ரவி தவறுதலான வெடி விபத்தில் சாவடைந்துவிடடார் ) தவிலும் , எழில்வண்ணன் ,இளவழகன் நாதஸ்வரமும் வாசித்து தமிழீழ தேசியத்தலைவர் அவர்களை வரவேற்றது வசந்தன் மாஸ்ரருக்கு அளவில்லா மகிழ்ச்சியினைக் கொடுத்தது என்பதனை அவரது முகத்தின் பூரிப்பபிலிருந்து நாம் அறிந்து கொண்டோம்., தலைவரின் செல்லை பிள்ளை போன்று எப்பவும் அண்ணையுடன் அவர் இருக்கும் போது சின்னப்பிள்ளை போல இருப்பர், அது எங்கள் தேசியத் தலைவர் மீதும் எங்கள் விடுதலைப் போராட்டத்தின் மீதும் அவர் கொண்ட அளவு கடந்த பற்றின் வெளிப்பாடு என்றே சொல்லலாம்.அதிலிருந்து என்றும் விலகியதில்லை.

தான் நேசித்த மக்களுக்காக எம் தலைவன் வழியில் கேணல். வசந்தன் என்ற மாவீரனாக அர்ப்பணித்துக் கொண்டார். அவரின் இலட்சியக் கனவுகளை எமது கரங்களுக்கு தந்து விட்டார். எமது இனத்தின் விடுதலைக்காக வித்தான வீர மறவர்களின் தாயகக் கனவுடன் கேணல். வசந்தன் என்ற மாவீரனது கனவினையும் எம் கடமை என ஒற்றுமையாகப் பயணிப்போம்.

-அன்பு-
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo














கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.