வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த விசாக பொங்கல் உற்சவ அறிவித்தல்2019.!!

அம்மன் அடியார்களே!
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த விசாகப் பொங்கல் உற்சவம் எதிர்வரும் 20/05/2019 ம் திகதி திங்கள் கிழமை வழமை போன்று சிறப்பாக நடாத்த பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளது என்பதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டள்ளது.
எனவே அம்மன் அடியவர்கள் தங்கள் நேர்த்தி கடன்களை  நிறைவேற்ற முடியும்.


பொங்கல் கிரியைகள்

* 13/05/2019- மாலை 03:00 க்கு காட்டாவிநாயகர் ஆலயத்தில் இருந்து தீர்தம் எடுக்கும் புனித நிகழ்விற்காக தீர்த்தக்குடம் புறப்படல்

* 13/05/2019 மாலை 06:00 க்கு புனித தீர்த்தக்கரை கடலில் அன்னைக்கு உப்பு நீரில்  விளக்கெரிக்கும் தீர்தமெடுத்தல்

* 13/05/2019- இரவு 11:00 காட்டா விநாயகர் ஆலயத்தை தீர்த்தம் வந்தடைதல்

* 13/05/2019- நள்ளிரவு 12:00 அம்மன் சந்நிதானத்தில் மடை பரப்பி உப்பு நீரில் விளக்கெரித்தல்

* 15/05/2019- புதன் மடை

* 17/05/2019- வெள்ளி மடை

* 19/05/2019 - காட்டாவிநாயகர் ஆலய பொங்கல் உற்சவம்

* 20/05/2019- அதிகாலை 03:00 மடை பண்டம் அம்மன் ஆலயம் செல்லல்

* 20/05/2019- கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம்

* 20/05/2019- நள்ளிரவு 12:00 வளர்ந்து வைத்து பொங்கல்

* 25/05/2019- பக்தஞானி பொங்கல் ( பொங்கல் கிரியை நிறைவு)

விசேட ஏற்பாடுகள்

1. முப்படையினரின் மூவளைய பாதுகாப்பு

2. பொலிஸாரின் முழுமையான உடல்,உடைமை சோதனை

3. பிரதான வீதியுடன் மட்டுப்படுத்த பட்ட வாகன வசதிகள். ( ஆலய
வளவினுள் எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை)

4. வியாபார நிலையங்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி

5. பறவை காவடிகளுக்கான அனுமதி பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்பட வில்லை     (எனவே பறவை காவடி நேர்த்திக்கடன்களை அடுத்த வருடம் வழமை போல் நிறைவேற்ற முடியும்)

6. தேவையற்ற பொதிகளுடன் ஆலய வளவிற்குள் பிரவேசிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்

7. கட்டாயமாக தங்களது தேசிய ஆள் அடையாள அட்டையை எடுத்து வாருங்கள்

8. ஆலய வளவிற்குள் பாதுகாப்பு சோதனைகள் எதுவும் கிடையாது

9. முழுமையான பாதுகாப்பு தரப்பினரின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்.

ஆலய_நிர்வாகம்
 வற்றாப்பளை கண்ணகி அம்மன்

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.