பாலகுமார் எங்கே..??


ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் பாலகுமார். எனது ஊரைச் சேர்ந்தவர். அவர் புலோலி வங்கியில் பணி புரிந்த காலத்தில் இருந்து நன்கு தெரியும்.


இன்று நான் உயிருடன் இருப்பதற்கு அவரும் ஒரு காரணம். இந்திய உளவுப்படை என்னையும் தோழர் நெப்போலியனையும் கொல்லும்படி கேட்டதை உடனே சென்னையில் என்னை  சந்தித்து கூறியவர்.

அவர் தன் மகனுடன் முள்ளிவாய்க்காலில் சரணடைந்தார். இராணுவத்தினரிடம் அவர் உயிருடன் இருந்தமைக்கான படம் கீழே உள்ளது.

ஆனால் அவரும் அவருடைய மகனும் இன்னும் விடுவிக்கப்படவில்லை. பத்து வருடம் கழிந்துவிட்டது. அவர் எங்கே என்று இதுவரை அரசு அறிவிக்கவில்லை.

இன்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் பலருக்கு அவரை நன்கு தெரியும். கிளிநொச்சிக்கு சென்று அவரை சந்திப்பதில் மிகவும் ஆர்வம் காட்டியவர்கள் இவர்கள்.

இன்று அவர் எங்கே என்பதை அறிவதில் ஏனோ இவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

அவர் உயிருடன் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியென்றால் சரணடைந்த அவரை சுட்டுக் கொன்றவர்கள் யார்?

சரணடைந்த பாலகுமாரையும் அவர் மகனையும் சர்வதேச விதிகளுக்கு முரணாக கொன்றவர்கள் மீது ஏன் இன்னும் விசாரணை செய்யப்படவில்லை?

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர். இன்று அவருக்காக குரல் எழுப்ப ஒரு தமிழர் பிரதிநிதிகூட இல்லையா?

-பாலா-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.