ஆலயங்கள் அமைக்கப்பட்டது ஏன்??

ஆலயங்கள் மனிதர்களை வழிப்படுத்தும் இடமாக இருக்க வேண்டும்.

சமூகத்தில் உள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் இடம்.

 மக்களிற்காக ஆலயங்களே தவிர ஆலயங்களிற்காக மக்கள் அல்ல.

மன நிம்மதியை குலைக்கின்ற ஆலயங்கள் ஏதும் மனிதர்க்கு தேவை இல்லை.

பிரச்சினைகள் துன்பங்களை தீர்க்கும் இடமாக இருந்த ஆலயங்கள் இன்று பிரச்சினைகளுக்குரிய இடமாக மாறிவிட்டன.

தனிப்பட்டவர்கள் பணம் படைத்தவர்கள் போன்றோரின் அதிகார வர்க்கத்தில் இவை இன்று சீரளிகின்றது. எல்லா ஆலயமும் அல்ல சிறந்த ஆலயங்களும் நிர்வாகமும் உண்டு.

தாங்கள் நினைத்ததே நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பவர்கள் இவர்களின் நிர்வகிப்புகளால் பிரச்சினைகள் உருவாகின்றது.

திடீரென உண்டான பண வருகைகள் பலர் கண்ணை மறைக்கின்றது.

சிலர் அதற்கேற்றாப்போல் செய்யும் உபசாரங்கள் உபகாரங்களினால் ஏனைவர்களுக்கு உண்டாகும் தர்ம சங்கடம்.

இதில் குருமார்களிற்கு எந்த சம்மந்தங்களும் கிடையாது. ஆனாலும் அனைவரையும் அழைத்துப் பேசி செய்யலாம் ஆனால் அதை ஏற்கும் மனநிலையில் நிர்வாகங்களோ மக்களோ இல்லை. இதிலும் சில நல்லவர்கள் இந்த ஆலோசனைகளை ஏற்றாலும் பல ஆலயங்களில் ஏற்கப்படுவதில்லை.

அதனைவி ஆலயங்களில் பல கட்டமைப்புகள்
தர்மகர்த்தா சபை
நிர்வாகசபை
அன்னதான சபை
வழிபடுவோர் சபை
திருப்பணிசபை
விழாச் சபை
இவ்வாறு சபைகள் இருந்தும் ஏன் ஒன்றுபட்டு ஒரு நிகழ்வினை நடாத்த முடியவில்லை. ஆலயத்தினை நிர்வகிக்க ஓர் நிர்வாக சபை போதாதா.

ஆலயங்கள் சாதித்தியத்தின் அடிப்படையில் இயங்கி சாதித்தது என்ன. உங்கள் சொந்த வாழ்வில் அல்லது உங்கள் சுயவிடைங்களில் விரும்பினால் அவற்றைப் பாருங்கள் பொது இடத்தில் பொது விடைங்களில் ஏன் மூக்கை நுளைத்து அசம்பாவிதங்களை உண்டு பண்ணுகின்றீர்கள்.

ஓர் ஆலயத்தை உருவாக்க எத்தனை ஆயிரம் பேர் உழைத்திருப்பார்கள் நீங்கள் ஒருசிலர் போய் ஏன் அந்த ஆலயத்தை சீரளிக்கின்றனர்.

ஒன்று மட்டும் புலனாகிறது தெரிந்த வேலையை விட்டவனும் கெட்டான் தெரியாத வேலையை செய்தவனும் கெட்டான். ஆக தர்மஸ்தானங்களை தர்மவழியுல் பரிபாலியுங்கள்.

அதிகார,பணத்திற்கு ஆலயங்கள் ஒன்றும் அடிமைச் சாசனங்கள் இல்லையே.

தயவு செய்து அனைவரும் ஒன்றை விளங்குங்கள் கடவுள் ஆள்பார்த்து கருணை புரிவதில்லை.

அன்புடன் உங்களில் நானும் ஒருவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.