யேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய வைரவர் மடை பூஜை!!📷

யேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய வைரவர் மடை பூஜை இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.பைரவப் பெருமானுக்கு தேசிக்காயில்  நல்லெண்ணை அகல் தீபத்தை ஏற்றி அம்பாளை வழிபட எல்லா வளமும் பெருக வேண்டும் என பக்தர்கள் பக்த்தி பூர்வமாக வழிபட்டனர். நெய் நிரப்பி தீபம் ஏற்றியும் வழிபட்டார்கள். அதேபோல் பூசணிக்காயை மத்தியில் இரண்டாகப் பிளந்து அதனுள் எண்ணை அல்லது நெய் நிரப்பி தீபமும் காண்பிக்கப்பட்டது.


பைரவ மூர்த்திக்குப் பிடித்தமானது வாசனை திரவியங்களான  குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்த்து சந்தனகாப்பு செய்து வழிபடுவது என்பது தேவர்களின் ஆண்டுக்கணக்கில் ஒரு கோடி ஆண்டு பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் என்று சிவபுராணம் கூறுகிறது. பால், தேன், பன்னீர், பழரசம் அபிஷேகமும் மிக விசேஷமாக இடம்பெற்றது.

பைரவப் பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தேன், செவ்வாழையில் கற்ப்பூரம் ஏற்றப்பட்டது. வெல்லப் நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பல பழவகைகள் வைத்து பூஜை வழிபாடு வெகு சிறப்பாக இருந்தது.

பைரவருக்கு தாமரைப்பூ ,பூ மாலை, சந்தன மாலை அணிவித்து மல்லிகைப்பூ தவிர்த்து மஞ்சள், செவந்தி மற்றும் வாசனை மலர்களைக் கொண்டு அர்ச்சனைகள் இடம்பெற்றது.

No comments

Powered by Blogger.