பயங்கரவாதி சஹ்ரானுடன் ஒளிப்படம் எடுத்துக்கொண்ட நபர் அதிரடியாக கைது!


தடை செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானுடன் ஒளிப்படம் எடுத்துக்கொண்ட 31 வயதான முஸ்லிம் இளைஞர், கெக்கிராவை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரத்கடவலை பிரதேசத்தில் நகை அடகு வைக்கும் நிலையம் ஒன்றை நடத்தி வந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நடத்தப்பட்ட தேடுதலில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் பின்னர் அவர் மேலதிக விசாரணைகளுக்காக கெக்கிராவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அத்தோடு கைது செய்தவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளார்.
Powered by Blogger.